சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சைக்கான ஜிஎஸ்டி குறைப்பு போதுமானதல்ல.. மத்திய அரசிடம் மீண்டும் மல்லுக்கட்டிய பிடிஆர்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல என 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மத்திய அரசிடம் மீண்டும் மல்லுக்கட்டிய PTR | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடந்த 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் முதல்முறையாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

    இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

    அப்போது அவர் முன்வைத்த கேள்விகள் பாஜக அரசுக்கு ஆட்டம் கொடுத்தது. இதில் இரு விஷயங்களை பிடிஆர் முன் வைத்தார். அதாவது மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மத்திய நிதியமைச்சர் உள்பட ஒவ்வொரு அமைச்சர்களும் மாநிலத்தின் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான்.

    நன்கொடையாளர்

    நன்கொடையாளர்


    எனவே ஒன்றிய அரசு ஒரு போதும் நன்கொடையாளராக செயல்பட முடியாது என்றார். அது போல் மற்றொரு விஷயம், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இப்போது இல்லாவிட்டால் எப்போது? ம்மால் இயலாவிட்டால் வேறு யாரால் இயலும் என கேள்வி எழுப்பி அனைவரையும் வெலவெலக்க வைத்தார்.

    தமிழக மக்கள்

    தமிழக மக்கள்

    இந்த நிலையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முகத்தில் அடித்தாற்போல் பேசி தமிழக மக்களின் அப்லாஸை அள்ளியுள்ளார்.

    நிதியமைச்சர்

    நிதியமைச்சர்

    அவர் பேசியது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க, 7 மாநில உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்புடையதாக இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர்

    அமைச்சர்

    கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது பூஜ்ய விகிதம் அல்லது பூஜ்யம் புள்ளி ஒன்று சதவிகிதம் வரி தான் விதிக்க வேண்டும் என கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருந்துகள்

    மருந்துகள்

    மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    English summary
    PTR Palanivel Thiyagarajan says that GST deduction for Covid drugs and equipments are not enough.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X