• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கீழ்தரமான செயல்கள்.. ஆபாச மதன்-கிருத்திகா கோடிக்கணக்கில் பணம் குவித்தது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை : பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசியும், பணமோசடியில் ஈடுபட்டதுமான புகாரில் சிக்கி கைதாகி உள்ள யூடியூபர் மதன் கோடிக்கணக்கில் பணம் குவித்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

  என்னை மன்னிச்சுடுங்க சார்.. போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய Madan OP.. பரபரப்பு சம்பவம்

  யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியது, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளை தகாத முறையில் பேசியது, பண மோசடி செய்தது என பப்ஜி மதன் மீது ஆன்லைனில் பல்வேறு புகார்கள் குவிந்தது. அத்துடன் மதன் பேசிய ஆபாச பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

  இதையடுத்து சேலம் சென்ற தனிப்படை போலீசார் முதலில் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். அதன் பின்னர் தர்மபுரியில் பதுங்கி இருந்த மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது பூந்தமல்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 3ம் தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தனிப்படை அமைச்சி தேடுற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை சார்.. போலீஸிடம் அழுத மதன் தனிப்படை அமைச்சி தேடுற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை சார்.. போலீஸிடம் அழுத மதன்

  ஆடிகார்கள்

  ஆடிகார்கள்

  கைதான கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருப்பது போலீசாரின் ஆய்வில் தெரியவந்தது. தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் 45லட்சம் மதிப்பில் இரண்டு வீடுகள் உள்ளன. ஆடி உள்ளிட்ட இரண்டு ஆடம்பர கார்கள் உள்ளன. பல லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகளும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  யூடியூப் சேனல்

  யூடியூப் சேனல்

  சென்னை அம்பத்துாரில் ஓட்டல் துவங்கிய மதன் கிருத்திகா தம்பதி, அதில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டலை இழுத்து முடியுள்ளனர். அதன்பின்னர் குறுகிய காலத்தில் கோடிகளை சம்பாதிக்க ஆசைப்பட்ட மதன் கிருத்திகா தம்பதி யு டியூப் சேனல் துவங்கலாம் என்று யோசித்துள்ளனர். அதன்படி, 'பப்ஜி மதன் கேர்ள்; மதன் 18 பிளஸ்' என, பல பெயர்களில், சேனல் துவங்கி உள்ளார்கள்.

  பப்ஜி விளையாட்டு

  பப்ஜி விளையாட்டு

  எளிதில் அடையாளம் காண முடியாத வகையில், வி.பி.என்., என்ற தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அவற்றை தங்களது யு டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். இதனால் வியூவர்கள் குவிந்துள்ளனர். பாலோயர்களும் அதிகரித்துள்ளனர். குறுகிய காலத்திலேயே எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

  கிருத்திகா செயல்

  கிருத்திகா செயல்

  ஆபாச பேச்சு மூலமே அதிகம் பேரை கவர்ந்துள்ளனர். ஆன்லைன்' விளையாட்டின் போது, அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு பின்னணியில் மதன் குரல் கொடுத்துள்ளார். பெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றி மதன் அடிக்கடி பேசியிருக்கிறார். எதிர்முனையில் விளையாடிய மதனின் மனைவி அதற்கு பதிலாக கிளுகிளுபப்பாக பேசியிருக்கிறார். இதனால் அதிகம் பேர் இவர்களது வீடியோக்களை பார்க்க காரணமாக அமைந்தது. இதனால் இவர்களின் யூடியூப் வருவாய் எகிறியது.

  வருமான வரி மோசடி

  வருமான வரி மோசடி

  கிருத்திகாவின் பேச்சை நம்பி, மற்ற பெண்களும் ஆபாசமாக பேசினர். இதனால், ஆன்லைன் விளையாட்டு சேனல்களில் 'நம்பர் - 1' இடத்தை பிடித்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் 2 'ஆடி' கார்கள், சென்னை, சேலத்தில் சொகுசு பங்களாக்கள் வாங்கியிருக்கிறார்கள். .மூன்று ஆண்டுகளில் பல கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார்கள். அதை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் குவித்துள்ள மதன், கிருத்திகா தம்பதி வருமான வரி தாக்கல் செய்யாமல், ஏமாற்றி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையும் இவர்களை விசாரிக்க போகிறது.

  English summary
  youTube Madan, who was arrested on a charge of speaking obscenely and engaging in money laundering in the game of pubg, has amassed millions of rupees.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X