• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆடம்பர ஹீரோ பப்ஜி மதனின் வங்கி மோசடி - ஆபாச பேச்சில் கோடிகளை குவித்தது பற்றி மனைவி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: நான் போலீஸ் கையில் சிக்க மாட்டேன் என்று திமிராக பேசி வருகிறார் பப்ஜி மதன். சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது என்பது மதனின் திமிர் பேச்சாகும். பப்ஜி விளையாட்டில் ஆபசமாக பேசிய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் மதன் அம்பத்தூரில் ஆடம்பரமான ஹீரோ என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி,பின்னர் உரிமையாளருக்கு கடன் தராமல் மோசடி செய்து தப்பியோடியது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  நான் என்ன PMஆ? எதுக்கு வீடியோ எடுக்கறீங்கனு கேட்ட மதன்.. நீ அக்யூஸ்டுனு தலையில் போட்ட இன்ஸ்பெக்டர்

  இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலமாக லைவ் சாட்டிங்கில் ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது, சிறுமிகளிடம் பேசி ஆபாச ஆடியோ உள்ளிட்டவைகளை தனது யூடியூப் சேனலில் வெளியிடும் செயல்களில் மதன் என்பவர் ஈடுபட்டு வந்தார்.

  மதன் மீது சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தற்போது மதனை தேடி வருகின்றனர். காவல்துறையினர் கண்களில் படாமல் தலைமறைவாக உள்ள மதன், தன்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டு வருகிறார்.

  ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்! ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!

  மதன் மனைவி கைது

  மதன் மனைவி கைது

  பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி யூடியூப்பில் வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவியான கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
  கிருத்திகாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாவை வாங்கியதாகவும் தெரியவந்தது.

  வங்கி மோசடி

  வங்கி மோசடி

  கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஆபாச பேச்சு வழக்கில் சிக்கிய மதன் வங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. பப்ஜி மதன் அம்பத்தூரில் ஆடம்பரமான ஹீரோ என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி,பின்னர் உரிமையாளருக்கு கடன் தராமல் மோசடி செய்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  வாடகை தராமல் ஏமாற்றிய மதன்

  வாடகை தராமல் ஏமாற்றிய மதன்

  மதன் கடந்த 2018 ஆம் ஆண்டு அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் 1வருடமாக வாடகைக்கு எடுத்து ஹோட்டலை நடத்தினார். ஹோட்டலை காட்டி மதன் வங்கிகளிடம் 5லட்சத்திற்கும் மேற்பட்ட கடன் வாங்கியுள்ளார். ஹோட்டலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றி தப்பியோடியுள்ளார். இதனால் உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார்.

  பப்ஜி விளையாட்டு

  பப்ஜி விளையாட்டு

  கிருத்திகாவை மதன் காதலித்த போது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் கிருத்திகாவை அழைத்து கொண்டு மதன் தலைமறைவானது தெரியவந்தது. இதன் பிறகு தான் மதன் தனது அடையாளத்தை காட்டாமல் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து யூடியூப்பை தொடங்கி பப்ஜி விளையாடி அப்லோடு செய்தார். அவரது ஆபாச பேச்சுக்கு பலரும் அடிமையானதுதான் கொடுமை.

  அசிங்க பேச்சு குவிந்த பணம்

  அசிங்க பேச்சு குவிந்த பணம்

  டாக்ஸிக் மதன் 18+ என்ற பெயரில் மற்றொரு யூட்யூப் சேனலையும் தொடங்கினார். அதில் அதிகம் ஆபாசமாகவும் அறுவெறுப்பாகவும் பேச தொடங்கினார். இந்த யூடியுப் தளத்தை பல லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்தனர் சேர்ந்தனர். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கியது. கார், பங்களா என ஆடம்பரமாக வாழத் தொடங்கினார் இந்த ஆபாச ஹீரோ.

  அசிங்கமாக பேசிய கிருத்திகா

  அசிங்கமாக பேசிய கிருத்திகா

  மதன் நடத்திவந்த யூடியூப் சேனலில் அவர் பெண்களை மிக கேவலமாக பேசக்கூடிய வார்த்தைகளுக்கு சற்றும் சளைக்காமல் எதிர்முனையில் பச்சை பச்சையாக பெண்களின் உடல் உறுப்புகளை வர்ணித்து ஆபாசமாக பேசினார் கிருத்திகா. இதற்காகவே கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.

  தடை செய்யப்பட்ட பப்ஜி

  தடை செய்யப்பட்ட பப்ஜி

  பப்ஜி மதன் யூடுயூப்பில் வீடியோவை அப்லோட் செய்வதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்தி உள்ளார். யூடுயூப் வீடியோவில் ஆபாசமாக பேசி லட்சங்களை குவித்து பப்ஜி மதனாக மாறினார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டை வி.பி.என் சர்வரை பயன்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வந்தது தெரியவந்தது.

  பணம் பறித்தாரா மதன்

  பணம் பறித்தாரா மதன்

  மதன் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். சிறுமிகளிடம் மதன் பணப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

  30 சதவிகித சிறுவர்கள்

  30 சதவிகித சிறுவர்கள்

  உயர்நீதிமன்றத்தில் 30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூடியூப் சேனலை பின்தொடர்வதாக தெரிவித்துள்ளதால் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  தந்தையிடம் விசாரணை

  தந்தையிடம் விசாரணை

  விபிஎன் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் எங்கே இருக்கிறார் என்பதை மறைத்துக் கொண்டு மதன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். பப்ஜி மதனின் தந்தையிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவருமோ பார்க்கலாம்.

  English summary
  Pubg Madan Ambattur, who is wanted by the police in connection with the obscene speech at the Babji game, ran a non-vegetarian restaurant in the name of a luxury hero and later escaped by fraudulently not giving credit to the owner.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X