• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

2 பிஎம்டபிள்யூ, 2 வீடு.. யூடியூப் வீடியோவால் பப்ஜி மதனுக்கு கிடைத்த மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: யூடியூப் வலைத்தளத்தில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் மாத வருமானம் என்ன என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

  உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களில் பணம்.. Madan OP-க்கு கிடைத்த மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

  இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது பப்ஜி கேம். ஆனால் விபிஎன் பயன்படுத்தி பலரும் இதை விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டுக்கு டிப்ஸ் சொல்லி கொடுப்பதாக கூறி ஆன்லைனில், பங்கேற்பாளர்களின் கூடவே விளையாடுவது மதன் வழக்கம்.

  அப்போது மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி கொண்டு விளையாடுவார்கள்.

  இதனால் அவரது யூட்யூப் தளத்திற்கு 800000 சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர். இதனால், 'டாக்ஸிக் மதன் 18+' என்ற பெயரில் மற்றொரு யூடியுப் தளத்தை ஆரம்பித்து தினமும் பச்சை பச்சையாகப் பேசி வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, பணத்தை பறித்து சம்பாதித்துள்ளார் மதன்.

  பப்ஜி மதன் கூட சேர்ந்து.. பச்சை பச்சையாக பேசியது மனைவி கிருத்திகா.. 8 மாத கைக் குழந்தை வேறு.. கேவலம்பப்ஜி மதன் கூட சேர்ந்து.. பச்சை பச்சையாக பேசியது மனைவி கிருத்திகா.. 8 மாத கைக் குழந்தை வேறு.. கேவலம்

  பெங்களூரில் தலைமறைவு

  பெங்களூரில் தலைமறைவு

  இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தற்போது இவரை வலைவீசி தேடி வருகிறார்கள். காவல்துறை வட்டார தகவல் படி, மதன் தற்போது பெங்களூர் நகரில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது . அங்கே ஒரு தனிப் படையினர் விரைந்துள்ளனர். இதனிடையே சேலத்தில் உள்ள அவரது மனைவி கிருத்திகா இந்த யூ ட்யூப் வலைதளத்தின் அட்மின் என்பது தெரியவந்தது.

  கிருத்திகா கைது

  கிருத்திகா கைது

  யூடியூப்பில் மதன் உடன் சேர்ந்து ஆபாசமாக பேசும் பெண் குரல் கிருத்திகா உடையது என்பது உறுதி செய்யப்பட்டதும் அவர் கைது செய்யபட்டுள்ளார். 12 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல திடுக்கிடும் உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது..

  பணம் கிடைப்பதால்

  பணம் கிடைப்பதால்

  எனது கணவர் ஆபாசமாக பேசுவது முதலில் எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இவ்வாறு பேசுவதற்கு சிறுவர் சிறுமிகள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார் மதன். மேலும் மாதம் 7 லட்சம் வரை வருமானம் கிடைத்தது . உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு இவ்வளவு வருமானம் வந்ததால் எனக்கும் ஆசை ஏற்பட்டது. வெறுமனே ஒரு ஆண், பெண்ணைப் பற்றி ஆபாசமாக பேசினால் கிளர்ச்சி ஏற்படாது. ஒரு பெண் அப்படி பச்சை பச்சையாக பேசினால் இன்னமும் இளைஞர்கள் அதிகம் பேர் வந்து கேட்பார்கள். நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எனது மனதை மாற்றினார் மதன். இதனால் நானும் அதற்குச் சம்மதித்தேன்.

  பச்சை பச்சையாக பேசுவார்கள்

  பச்சை பச்சையாக பேசுவார்கள்

  மதன் பச்சை பச்சையாக பேசும் போது அவருக்கு ஈடு கொடுத்து நானும் அதே மாதிரி பச்சை பச்சையாக ஆபாசமாக பேசுவேன். இருவரும் கெட்ட வார்த்தைகளில் திட்டி கொள்வோம். இது கேட்கும் வாலிபர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பெண் இப்படி ஆபாசமாக பேசுகிறாரே என்று அவர்கள் ஆசையோடு வந்து கேட்க தொடங்கினார்கள். இதனால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அதிகரித்து எங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இவ்வாறு கூறியுள்ளார் கிருத்திகா.

  அடேங்கப்பா இவ்வளவு வருமானமா

  அடேங்கப்பா இவ்வளவு வருமானமா

  இவர்கள் வருமானத்துக்கு சாட்சியாக வீட்டில், ஒன்று அல்..ல இரண்டு பிஎம்டபிள்யூ வகை சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் பார்த்து ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். சென்னையில் மட்டும் 2 சொந்த வீடுகள் வாங்கியுள்ளனர் இந்த தம்பதிகள். இத்தனைக்கும் காரணம் மதன் மட்டும் கிடையாது , கிருத்திகா ஆபாசமாக பேசியதும்தான் என்கிறார்கள் காவல்துறையினர்.

  யார் இந்த கிருத்திகா

  யார் இந்த கிருத்திகா

  26 வயதாகும் கிருத்திகா இன்ஜினீயரிங் பட்டதாரி ஆகும். இப்போது 8 மாத கைக் குழந்தையும் இருக்கிறது. கிருத்திகா, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு முடித்து உள்ளார். ஆனால் தங்களது தகவல் தொழில்நுட்ப அறிவை ஆபாச பேச்சுக்கள் மூலமாக சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். மதனும் இன்ஜினியரிங் பட்டதாரி. முழுநேர யூடியூப் வீடியோ பதிவேற்ற வேலையில்தான் அவர் ஈடுபட்டு இருந்துள்ளார். இதுவரை மதன் மீது 150க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றப்பிரிவு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Youtuber Madan income: Do you know how much PUBG Madan op has earned from his YouTube channel with the help of his wife? here is the full detail.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X