• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பப்ஜி மதன் கூட சேர்ந்து.. பச்சை பச்சையாக பேசியது மனைவி கிருத்திகா.. 8 மாத கைக் குழந்தை வேறு.. கேவலம்

Google Oneindia Tamil News

சென்னை: யூட்யூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய பப்ஜி மதனை போலீசார் தேடி வரும் நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். கிருத்திகாதான் யூடியூப் சேனலின் அட்மின் என்பதும் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தைகளை பேசி இளைஞர்களை கட்டிப்போட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

  உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களில் பணம்.. Madan OP-க்கு கிடைத்த மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

  சேலத்தை சேர்ந்தவர் மதன். இவர்களது யூடியூப் சேனல் மூலம் பப்ஜி என்ற விளையாட்டுக்கு டிப்ஸ் கொடுப்பதாக கூறி பிரபலமானவர்.

  இதன் மூலம் 8 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் அவருக்கு வந்து சேர்ந்தனர். இப்படி ஐடியா கொடுக்கும் போது மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிக் கொண்டு விளையாடுவது மதன் வாடிக்கை. இந்த வக்கிரமான பேச்சுக்கும் ரசிகர்கள் உருவானது பெரிய கொடுமை.

  பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு.. 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. போலீசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னபப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு.. 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. போலீசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன

  ஆபாச பேச்சுக்கு ரசிகர்கள்

  ஆபாச பேச்சுக்கு ரசிகர்கள்

  இதன் காரணமாக மதன் 'டாக்ஸிக் மதன் 18+' என்ற பெயரில் மற்றொரு யூட்யூப் சேனலையும் தொடங்கினார். அதில் இன்னமும் கீழே இறங்கி பச்சை பச்சையாக பேச தொடங்கினார். இந்த யூடியுப் தளத்திற்கு 10 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கியது.

  சிறுமிகளை கூட விடவில்லை

  சிறுமிகளை கூட விடவில்லை

  இதனால் மதன், மன்மதன் பட சிம்பு கேரக்டர் போல மாறி விட்டார். 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பல்வேறு சிறுமிகளுடன் தொலைபேசியில் இவர் ஆபாசமாக பேசிய ஆடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைக்கேல் என்பவர் மதன் மீது புகார் அளித்தார். நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

   தலைமறைவான பப்ஜி மதன்

  தலைமறைவான பப்ஜி மதன்

  சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தில் மதன் மீது அளிக்கப்பட்ட புகார் போலீஸ் கமிஷனர் அலுவலக புகார் என அனைத்தும் பிறகு கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அது தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மீதான விசாரணையை தொடங்கினார். அவரை நேரில் வந்து ஆஜராக கேட்டுக் கொண்டனர். ஆனால் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகாத மதன் தலைமறைவாகிவிட்டார். விபிஎன் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் எங்கே இருக்கிறார் என்பதை மறைத்துக் கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

  முக்கிய திருப்பம்

  முக்கிய திருப்பம்

  இந்த நிலையில்தான் காவல்துறைக்கு ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. அதாவது பப்ஜி மதன் யூடியூப் சேனலுக்கு அவரது மனைவி கிருத்திகா இமெயில் ஐடி தான் தரப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் கிருத்திகாவுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் நேற்று சேலம் சென்று விசாரணை நடத்தினர்.

  கேவலமான வார்த்தைகள்

  கேவலமான வார்த்தைகள்

  8 மாதங்களுக்கு முன்புதான் கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஒரு இளம் தாய் போலவோ, ஏன் ஒரு பெண் போலவோ கூட கிருத்திகா நடந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆம்.. மதன் நடத்திவந்த யூடியூப் சேனலில் அவர் பெண்களை மிக கேவலமாக பேசக்கூடிய வார்த்தைகளுக்கு சற்றும் சளைக்காமல் எதிர்முனையில் பச்சை பச்சையாக பெண்களின் உடல் உறுப்புகளை வர்ணித்து ஆபாசமாக பேசிய பெண் குரல் கிருத்திகாவுக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

  பச்சை பச்சையாக பேசுவார்

  பச்சை பச்சையாக பேசுவார்

  நல்ல வருமானம் வந்ததன் காரணமாக கணவனும் மனைவியும் ஆபாசமாக பேசி அதை சிறுவர் சிறுமிகளுக்கு கொண்டுசென்று சேர்த்து சம்பாதித்துள்ளனர். ஒரு பெண் என்றும் பாராமல் பிற பெண்கள், அதிலும் சிறுமிகள் உடல் உறுப்புகளையும், அவர்கள் அம்மா முதல் கொண்டு அனைவரையும் பச்சையாக கேவலமாக திட்டும் வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசியுள்ளார் கிருத்திகா. இது உறுதி செய்யப்பட்டதும் 8 மாத குழந்தையுடன் கிருத்திகாவை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர் போலீசார்.

  12 மணி நேரம் விசாரணை

  12 மணி நேரம் விசாரணை

  சுமார் 12 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டார் கிருத்திகா. இதையடுத்து கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது தந்தை மாணிக்கத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மனைவி செய்யும் வேலையா இது

  மனைவி செய்யும் வேலையா இது

  பப்ஜி மகனுடன் ஆபாசமாக பேசும் பெண் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் அவரது சொந்த மனைவியே இவ்வாறு செய்துள்ளார் என்பதை போலீசாரால் கூட ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. கணவன் தவறான வழியில் செல்கிறார் என்றால் அதை திருத்துபவர் மனைவி. ஆனால் இங்கு கணவனை விட ஆபாசமாக பெண்களின் உடலைப் பற்றி பச்சை பச்சையாக பேசி அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து உடல் வளர்த்துள்ளார் ஒரு பெண் என்ற தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  English summary
  PUBG gamer Madhan Kumar Manikkam's wife Kruthika is the admin of his YouTube channel and spoken bad words with her husband.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X