சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. "சொன்னதை செய்த ஜோதிகா".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

ஜோதிகாவுக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிகா மீது குறை சொன்னவர்களும், சேற்றை வாரி பூசியவர்களும் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.. 'சொன்னதை செய்த ஜோதிகா" என்று சோஷியல் மீடியாவில் அவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Recommended Video

    ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

    "கோயிலுக்கு எல்லாம் அதிக செலவு செய்து பராமரிப்பு செய்றாங்க.. ஆனால் கோவில் எதிரிலேயே இருக்கும் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை.. கர்ப்பிணிகளை பார்க்கவே கஷ்டமா இருக்கு" என்று மனக்குமுறலையும், ஆதங்கத்தையும் சில மாதத்துக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார்.

    ஆனால், ஜோதிகா இப்படி பேசியது ஹிந்துக்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கிறது என கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது.. ஏதோ பேசக்கூடாததை அவர் பேசிவிட்டது போல, "ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும்" என வீடியோ போட்டு ஒரு தரப்பு அவரை வலியுறுத்தி கொண்டே இருந்தது.. இதை மத பிரச்சனையாகவும் திருப்ப முயன்றது... குடும்பமே சம்பாதிக்குதே.. பணத்தை தர வேண்டியதுதானே என்று வலியுறுத்தல்களும் எழுந்தன.

    ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!

    மன்னிப்பு

    மன்னிப்பு

    ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று சூர்யா வெளியிட்ட ஒத்த அறிக்கை ஜோதிகாவின் ஆதங்கத்துக்கு வலு சேர்த்தது.. போதாதக்குறைக்கு திரையுலகமே ஜோதிகா பக்கம் நின்றதையும் மறுக்க முடியாது.. இப்படி ஒரு சலசலப்பு நடந்து கெண்டே இருக்கும்போதுதான், ஜோதிகா சொன்ன அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் செல்வி என்பவரை பாம்பு கடித்துவிட்டது.. விஷயம் கலெக்டருக்கு சென்றது, உடனடி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.. வளாகத்தை சுற்றியிருந்த பகுதிகளில் 10 பாம்புகளை கண்டுபிடித்தனர்.

    பாம்புகள்

    பாம்புகள்

    முதன்முதலில் இந்த ஆஸ்பத்திரி பற்றி குறை சொன்னபோதுகூட, கலெக்டர் அங்கு சென்று ஆய்வு நடத்தினாரே தவிர, வேறு எந்த தரப்பும் நிதியுதவி செய்யவில்லை.. 10 பாம்புகளை பிடித்து கொண்டு போன போதுகூட, யாரும் ஆஸ்பத்திரி பெரிய அளவிலான பாதுகாப்பு, மற்றும் நிதியுதவியை செய்யவில்லை.. கடைசியில் இந்த விவகாரம் வெடித்து இத்தனை மாதமான நிலையில், ஜோதிகாவே முன்வந்து நிதியுதவியையும் தந்துள்ளார்.

     விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    ஜோதிகாவை பற்றி ஒரு தரப்பினர் பேசாத பேச்சு இல்லை.. எல்லைமீறிய விமர்சனங்கள், ஆபாச வார்த்தைகள், தனிநபர் தாக்குதல்கள் தொடர்ந்து வந்தபோதும், எதற்குமே ஜோதிகா பதிலளிக்கவில்லை.. கண்டனம் தெரிவித்த யாரையுமே அவர் பொருட்டாக நினைக்கவில்லை.. காரணம், அவர் ஆஸ்பத்திரியில் கண்ட அவலம் உண்மையானது.

     மத பிரச்சனை

    மத பிரச்சனை

    இப்போது, அதே ஆஸ்பத்திரிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதும், குறை சொன்னவர்களும், கேவலமாக பேசியவர்களும் வாயை மூடி கொண்டுள்ளனர்.. மத பிரச்சனையாக திசை திருப்ப முயன்றவர்களுக்கு ஜோதிகா சரியான பதிலடியை தந்துள்ளார்.. ஆயிரம் பேச்சு பேசினாலும், செயல் மட்டுமே நிஜம் என்பதை நிதியுதவி தந்து நிரூபித்துள்ளார். எல்லாவற்றிலும் குறை சொல்பவர்கள் இப்படியே குறை சொல்லி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

     விவசாயம்

    விவசாயம்

    அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் முதல் ஜோதிகாவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர்.. சோஷியல் மீடியாவில் சொன்னதை செய்த ஜோதிகா என்று உச்சிமுகர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.. தற்போது சிவக்குமாரின் குடும்பத்துக்கே மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து விட்டது. கல்விக்கு சூர்யா, விவசாயத்திற்கு கார்த்தி, மருத்துவ நலனுக்கு ஜோதிகா குரல் கொடுப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. இதையும் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், தாய்-சேய் நலன்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும்.. எப்படியோ குறைகளை சுட்டிக்காட்டியதுடன், புண்ணியத்தையும் சேர்த்தே சம்பாதித்துவிட்டார் ஜோதிகா!

    English summary
    jothika: public appreciated actress jothika for her help to gv hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X