சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை.. தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதியா? பொதுமக்கள் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்த சில நாட்களிலேயே திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதித்திருப்பது எப்படி என புரியவில்லை என்பது பொதுமக்களின் கேள்வி.

Recommended Video

    மெரினாவுக்கு தடை விதித்துவிட்டு.. தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதியா? மக்கள் கேள்வி

    திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்படலாம் என தமிழக அரசு இன்று அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை நமது ஒன் இந்தியா தமிழ் தளம் கேட்டது.

     Public opinion on theatres to open with 100% occupancy

    இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராம்குமார் கூறியதாவது:

    ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. சென்னை மெரினாவில் ஒன்றுகூடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. கொரோனா பரவலை காரணமாக வைத்து இந்த தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இதனை எப்படி பார்ப்பது என்பது தெரியவில்லை.

    தியேட்டர்களில் இனி 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் படத்தை என்ஜாய் பண்ணுங்க!தியேட்டர்களில் இனி 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் படத்தை என்ஜாய் பண்ணுங்க!

    ஒருபக்கம் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்; முதல்வரும் பிரசாரம் செய்கிறார். இருவரது பிரசார கூட்டங்களிலும் சமூக இடைவெளி என்பது இல்லை. இப்படியான போக்கினால் கொரோனா நோய் தொற்று அதிகமாகும் வாய்ப்புதான் உள்ளது.

    இப்போது புதிய வகை கொரோனா தொற்றும் வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியானவற்றை தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது தெரியாமலேயே செய்கிறார்களா? என தெரியவில்லை.

    திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் படம் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் கேட்கவும் இல்லை. பொதுவாக தலைவர்கள் மாஸ்க் போட்டு பேசுங்கள் என்கின்றனர். இவர்கள் யாரும் மாஸ்க் போடாமல்தான் பேசுகின்றனர். இதையெல்லாம் அரசே குறைத்து கொண்டால்தான் சரியாகவரும். இவ்வாறு தஞ்சாவூர் ராம்குமார் கூறியுள்ளார்.

    English summary
    Here is Public opinion on the Govt's order to theatres to open with 100% occupancy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X