சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தது அறிவிப்பு.. சென்னை மின்சார ரயிலில் பொதுமக்கள் நாளை முதல் பயணம் செய்ய அனுமதி..!

நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தது.. அதனால், வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை படிப்படியான தற்போது இயங்கி வருகிறது.

Public will be allowed to travel on the Chennai Electric train from Tomorrow

அந்த வகையில், அத்தியாவசிய பணி, அரசு பணிக்கு செல்பவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்திருந்தது:

இந்த நிலையில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடைமதுரை மாவட்டத்தில் ஜனவரி 6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை

அதாவது பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில், மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தகவல் அறிவித்துள்ளது.

மேலும், பயணம் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே பொதுமக்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Public will be allowed to travel on the Chennai Electric train from Tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X