• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அந்த வார்த்தை.. இது "திராவிடத்தின் குற்றப்பத்திரிகை".. ஏ.கே.ராஜன் அறிக்கைக்கு கிருஷ்ணசாமி விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட சித்தாந்த ஆட்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.. ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய/பாரத/மத்திய அரசாங்கம் என்று ஒரு இடத்தில் கூட வராமல் நமது தேசத்தை மிகப்பெரிய அளவிற்கு இருட்டடிப்பு செய்திருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஏ.கே ராஜன் குழு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது.. அதில், நீட் தேர்வை ரத்த செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

அதாவது, நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

ஜி.எஸ்.டி கூட்டத்தை தவிர்த்த பி.டி.ஆர்.. கடும் கண்டனம் தெரிவித்த ஜி.கே.வாசன்.. பரபரப்பு பேட்டி!ஜி.எஸ்.டி கூட்டத்தை தவிர்த்த பி.டி.ஆர்.. கடும் கண்டனம் தெரிவித்த ஜி.கே.வாசன்.. பரபரப்பு பேட்டி!

 அறிக்கை

அறிக்கை

இந்த அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. மநீம தலைவர் கமல் சொல்லும்போது, "நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதை உரக்க சொல்கிறது நீதிபதி ராஜன் அக்குழுவின் அறிக்கை.. உண்மையை வெளிக்கெணர்ந்து சட்ட போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏகே ராஜன் குழுவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 பாதிப்புகள்

பாதிப்புகள்

அதேபோல புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "நீட் பாதிப்புகள் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கை, திராவிடத்தின் குற்றப்பத்திரிக்கை" என்று விமர்சித்துள்ளார்.. இது தொடர்பான அறிக்கையில், அவர் சொல்லி உள்ளதாவது:

 புனைக்கதைகள்

புனைக்கதைகள்

"எத்தனை கமிட்டி போட்டு ஆராய்ந்தாலும், எவ்வளவு பொய்யுரைகளையும், புனைக்கதைகளையும் பரப்பினாலும் உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியாது என்பதற்கு ஏ.கே.ராஜன் கமிட்டியின் 165 பக்க அறிக்கையே சான்று... இது அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையைப் போல் இல்லை... ஒரு அரசியல் கட்சியின் சார்பாக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையாகவே உள்ளது... நீட் தேர்வுக்கு எதிராக, திராவிட அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு கொண்ட கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கிய அக்குழுவிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

 நீட் தேர்வு

நீட் தேர்வு

எனினும் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு அரசியல் கூட்டணி 'நீட்' தேர்வால் 'சமூக நீதி'க்கு பங்கம் வந்துவிட்டது என கடந்த ஐந்து வருடங்களாக பரப்புரை செய்து வந்தார்களே, உண்மையிலேயே அது போன்று எதாவது ஒரு பாதிப்பை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறதா? அதற்கான தரவுகளை இவர்கள் சமர்ப்பித்து இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காகவே அறிக்கையின் 165 பக்கங்களையும் துருவித் துருவி படித்துப் பார்த்தேன். ஆனால், இவர்கள் புரட்டி வந்த 'சமூக நீதி'க்கு எவ்வித பங்கமும் வந்ததற்கான ஆதாரம் எதுவும் அறிக்கையில் இல்லை.

 திராவிட சித்தாந்தம்

திராவிட சித்தாந்தம்

எனவே இப்பொழுது அவர்கள் 'கிராமப்புற' மற்றும் 'தமிழ் பாடத்திட்டம்' என்ற வேறு வேறு போர்வைக்குள் நுழைகிறார்கள். NCERT என்ற தேசிய கல்வித் திட்டம் மற்றும் மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலும் நடைபெறும் நீட் தேர்வில் தமிழ் மொழி வழிக் கல்வி மாணவர்களால் பெரிய அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை' என்று இக்கமிட்டியில் ஒத்துக் கொண்டிருப்பது அவர்கள் தங்களின் திராவிட சித்தாந்த தோல்விக்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதைப் போல் உள்ளது.

 மாணவர்கள்

மாணவர்கள்

திராவிட சித்தாந்த ஆட்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.. மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று சொல்லக்கூடிய வட மாநிலங்களில் கூட இந்த அளவிற்கு நீட்டுக்கு எதிராகக் கூக்குரல் கிடையாது.

 அடையாளம்

அடையாளம்


ஆனால் பட்டவர்த்தனமாக எந்த தமிழ் மொழியைக் கூறி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்களோ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட சமுதாயத்திற்கு நல்ல கல்வியைக் கூட கொடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல். இதிலிருந்தே திராவிடத்தால் தமிழர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள்; அவர்களுடைய தரம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

 தேசியம்

தேசியம்

ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய/பாரத/மத்திய அரசாங்கம் என்று ஒரு இடத்தில் கூட வராமல் நமது தேசத்தை மிகப்பெரிய அளவிற்கு இருட்டடிப்பு செய்திருக்கிறது.. மே 7-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட 'Dravidian Stock' முழக்கம் வலுவாகி, அது 'ஒன்றியமாக' வளர்ந்து, நீட் தேர்வையே 'தேசியம் திராவிடம்' அல்லது 'Central vs State' என்ற அரசியல் மேடையாக்கி மெல்ல மெல்ல இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டாடிக் கொண்டு போக வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கனவின் ஒரு பகுதியாகவே ராஜன் கமிட்டி அறிக்கையைப் பார்க்க முடிகிறது" என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Pudhiya Tamizhagam Krishnasamy criticized AK Rajan committee Neet report Pudhiya Tamizhagam Krishnasamy criticized AK Rajan committee Neet report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X