சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி குழப்பம் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

Puducherry Former Cong Minister Namachivayam visit to Delhi, to Join BJP?

நமச்சிவாயம், அவரது ஆதரவாளர் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். பாஜகவில் இணைய நமச்சிவாயம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை நமச்சிவாயம் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

 'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல் 'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்

இச்சந்திப்பின் போது நமச்சிவாயமும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைவார்கள் அல்லது இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது.

English summary
Puducherry Former Cong Minister Namachivayam has visited to Delhi and he will Join BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X