சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா.. திமுகவுக்கு சூப்பர் பாடம் கிடைச்சிருச்சு.. புதுச்சேரி கலாட்டாவில்.. செம..!

புதுச்சேரி அரசியல் திமுகவுக்கு நிறைய பாடத்தை தந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தூரத்தில் நடந்தபோதெல்லாம் கூட நமக்கு இந்த மேட்டரோட வீரியம் புரியாமல் இருந்தது. இப்போது இதோ பக்கத்து ஸ்டேட் பாண்டிச்சேரியில் நடந்த பிறகுதான்.. பாஜகவின் ஸ்கெட்ச் பலருக்கும் தெளிவாகப் புரிய வந்துள்ளது. அதை விட பாஜக மறைமுகமாக திமுகவுக்கு ஒரு நல்லது செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவாவிலும் இதேதான் நடந்தது. கர்நாடகத்திலும் இதே கதைதான்.. இன்னும் பல மாநிலங்களிலும் இதுபோலத்தான் நடந்தது. பாஜக மீது தேசிய அளவில் உள்ள பொதுவான குற்றச்சாட்டே பிற கட்சிகளை கபளீகரம் செய்கிறது, பிற கட்சித் தலைவர்களை தன் பக்கம் இழுத்து தான் பலமடைகிறது என்பதுதான்.

இது தூரத்தில் நடந்தபோதெல்லாம் யாருக்கும் பெரிதாக கவலை வரவில்லை. ஆனால் இதோ கூப்பிடு தூரத்தில் ஒரு ஆட்சியே கவிழ்ந்து போய் விட்டது. காரணம், பாஜகவின் மறைமுக வலை வீச்சில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களும், ஒரு திமுக எம்எல்ஏவும் சிக்கியதால்தான்.

திடீரென புஷ்பா வீட்டுக்குள் நுழைந்த ரோஜா.. குழந்தையை அப்படியே வாரியணைத்து.. ஆந்திர ஆனந்தம்..!திடீரென புஷ்பா வீட்டுக்குள் நுழைந்த ரோஜா.. குழந்தையை அப்படியே வாரியணைத்து.. ஆந்திர ஆனந்தம்..!

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜகவுக்கு எந்த அடையாளமும் இல்லாமல்தான் இருந்தது. கிரண் பேடி என்று இங்கு வந்தாரோ அன்றே பாஜகவுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் வேலைகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. முதலில் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாகப் போட்டார். நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுத்தபடி இருந்தார். இதோ அவரும் கிளம்பிப் போய் விட்டார். நாராயணசாமி ஆட்சியும் காலியாகி விட்டது.

பாடம்

பாடம்

புதுச்சேரியை வைத்து கட்சிகள் பல பாடம் படிக்கலாம்.. குறிப்பாக திமுகவுக்கு கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக சுதாரிப்பாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை புதுச்சேரி கற்றுக் கொடுத்துள்ளது... தெளிவான, விவரமான, எந்த வழக்குகளிலும் சிக்காத, காசுக்கும் வேறு எதற்கும் ஆசைப்படாத, மிரட்டல்களுக்கு அஞ்சாத நல்ல வேட்பாளர்களை போட்டாக வேண்டும்.

நாராயணசாமி

நாராயணசாமி

தெளிவான, வலுவான வேட்பாளர்களைப் போட்டால் மட்டும்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும், ஆட்சியிலும் அமர முடியும், ஆட்சியில் அமர்ந்தாலும் நீடிக்க முடியும், 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியும். நாராயணசாமி ஆட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து பலரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.. ஆட்சியில் அமருவதற்காக தாஜா செய்து ஆட்களைத் திரட்டி வைத்து தாக்குப் பிடிக்கலாம் என்று நினைத்தால் அது இனிமேல் நடக்காது. காரணம், பாஜகவின் வலை வீச்சு அந்த அளவுக்கு வலுவாக இருக்கிறது.

பாடம்

பாடம்

எனவே திமுக இதில் நிறைய கவனித்தாக வேண்டும்... அப்படிச் செய்தால்தான் மீண்டும் ஒரு வேளை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் ஆட்சியில் தொடர முடியும்,, நீடிக்க முடியும்.. எனவே அந்த வகையில் புதுச்சேரி சம்பவங்கள் திமுகவுக்கு நல்லதொரு பாடம்தான்.

English summary
Puducherry has given political positives to the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X