சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் "அவரை" மிஸ் பண்ணிட்டாரோ.. எல்லாத்துக்கும் காரணம் மோடியும், அமித்ஷாதான்.. செல்வம் பெருமிதம்

புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஏற்கனவே திமுகவில் இருந்தவர்

Google Oneindia Tamil News

சென்னை: செல்வத்தை முதல்வர் ஸ்டாலின் மிஸ் பண்ணிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், இன்று புதுச்சேரி பாஜகவில் சபாநாயகராக பதவியில் உட்கார்ந்துள்ளதுடன், பாஜகவுக்கான கெத்தை உயர்த்தி விட்டார் செல்வம்.

ஏம்பலம் செல்வம் ஒரு புதிய வரலாறினை புதுச்சேரியில் படைத்துள்ளார். பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை...

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

அம்மாநில பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருப்பதுடன், முதல்முறையாக எம்எல்ஏவாக ஜெயித்து, சபாநாயகர் பதவியையும் கப்பென பிடித்து விட்டார்.

 கட்சி தலைவர்கள்

கட்சி தலைவர்கள்

புதிய சபாநாயகராக இன்று செல்வம் பதவியேற்றும் கொண்டார்.. இவரை பல்வேறு கட்சி தலைவர்கள் இன்று வாழ்த்தி பேசினர்.. அந்த வகையில், திமுக உறுப்பினர் நாஜிம் பேசும்போது, புதிய அரசுக்கும் புதிய சபாநாயகருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. புதிய சபாநாயகர் செல்வம் திமுகவில் நீண்டகாலம் இடம்பெற்றவர்.. திமுகவின் தொகுதி செயலாளராகவும் பல வருடங்கள் பதவி வகித்தவர்" என்றார்.

 பதவி

பதவி

அப்போது டக்கென சபாநாயகர் செல்வம் குறுக்கிட்டு, "நான் பாஜகவுக்கு இடம் மாறியதால்தான் இந்த உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன்... அங்கேயே இருந்திருந்தால் நான் இன்றுவரை அப்படியேதான் இருந்திருப்பேன்... இது உங்களுக்கும் நல்லாவே தெரியும்" என்றார். இதையடுத்து, மறுபடியும் நாஜிம் பேசும்போது, யாருக்கு என்ன தரவேண்டும் என்பது கட்சித்தலைமைக்கு தெரியும்... திமுகவால் பெரும் பதவிகளை பெற்றவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்றார்.

 மோடி - அமித்ஷா

மோடி - அமித்ஷா

உடனே சபாநாயகர் செல்வம் மறுபடியும் குறுக்கிட்டு, என்னை இந்த பதவிக்கு பரிந்துரை செய்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சொல்லவும், அதற்கு மேல் திமுகவின் நாஜிம் எதுவும் பேசமுடியாமல் வாழ்த்து சொல்லி உட்கார்ந்துவிட்டார்.

 விபி துரைசாமி

விபி துரைசாமி

திமுகவில் இருப்பவர்கள் பாஜகவுக்கு செல்வது என்பது அரிதான ஒன்று.. வேண்டுமானால் அதிமுக, காங்கிரஸ் இப்படி கட்சிகளை மாற்றிகொள்வார்களே தவிர, தங்கள் சித்தாந்தத்துக்கு எதிரான கட்சிகளுக்கு தாவ மாட்டார்கள்.. இந்த முறைதான் விபி துரைசாமி, குக செல்வம் என ஜம்ப் ஆகி ஷாக் தந்தனர்.. அந்த வரிசையில்தான் செல்வமும் இணைகிறார்.. இவரும் திமுகவில் சீனியராகவே இருந்துள்ளார்..

 சீனியர்

சீனியர்

கடந்த 1982 முதல் திமுகவில் செயல்பட்டு வந்திருக்கிறார்.. 1988 முதல் தொகுதி செயலராகவும் இருந்தார்.. எம்எல்ஏ, எம்பி பதவியில் போட்டியிட திமுகவில் வாய்ப்பு தரவில்லை போலும்.. அதனால்தான், கடந்த 2016ல் கட்சியிலிருந்து வெளியேறினார். பிறகு பாஜகவில் இணைந்தார்.

 முக்கிய பதவிகள்

முக்கிய பதவிகள்

வழக்கமாக மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும், அவர்களுக்கு பெரிய பொறுப்பை தருவது திமுகவின் சமீபத்திய வழக்கமாகி உள்ளது.. இந்த பழக்கத்தை முதன்முதலில் துவக்கி வைத்ததே 2 தேசிய கட்சிகள்தான்.. பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முக்கிய பதவியை தருவது பாஜகவில் ஆரம்பகாலத்தில் இருந்து வரும் பழக்கமாகும்.. அப்படித்தான் செல்வத்திற்கு இன்று பதவி கிடைத்துள்ளது.

பாஜக

பாஜக

6 மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் பாஜக நுழைந்து ஆட்சியில் பங்கெங்கும் என்று யாருமே கனவு காணவில்லை.. அப்போதே திமுக சுதாரிக்க தவறிவிட்டது.. வெறும் 3 மாதத்தில், வேறு கட்சியில் இருந்தவர்களை தங்கள் பக்கம் இழுத்து, உறுப்பினர்களின் பலத்தையும் பெருக்கி அமைச்சர் பதவிகளுக்கான பேரத்தை பாஜக செய்து வருகிறது.

திமுக

திமுக

ஆனால், தன் கட்சியில் ஏற்கனவே இருந்த ஒருவரை, இந்தமுறை தேர்தலிலாவது, திமுக தங்கள் பக்கம் தட்டிதூக்க முயன்றிருக்கலாம்.. புதுச்சேரியிலும் திமுக செல்வாக்கு உயர்ந்திருக்கும்.. எதிர்பாராமல், பாஜக திமுகவை முந்தி கொண்டுவிட்டது.. ஆட்சியில் இன்று பங்கேற்றுள்ளதுடன், சபாநாயகராகவும் திமுகவில் இருந்து வந்தவரை நியமித்து விட்டது... புதுச்சேரி பாஜகவும் வலிமை பெற்றுள்ளது..!

English summary
Puducherry Speaker BJP Embalam Selvam and DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X