சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்!

அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் புகழேந்தி பெயர் இடம்பெறவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Pugazhendhi Name was missing AMMK Spoke Persons list today

    சென்னை: அமமுக செய்தி தொடர்பாளர்கள் லிஸ்ட் ஒன்றினை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் புகழேந்தி பெயர் மிஸ்ஸிங்.. இதுதான் இப்போதைய அரசியல் ஹார்ட் பீட் டாபிக்!
    செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வனை போலதான் புகழேந்தியும் தினகரன் மீது அதிருப்தியில் இருந்தார். அதனால்தான் அவரது செயல்பாடுகள் அமமுகவில் குறைந்து காணப்பட்டு வந்தது.

    இந்த சமயத்தில்தான், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வீடியோவும் வெளியானது. "டிடிவி தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்" என்று புகழேந்தி பேசியதுடன், பல குற்றச்சாட்டுகளை அதில் முன்வைத்திருந்தார்.

    அமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கைஅமித் ஷா தேன்கூட்டில் கைவைத்து விட்டார்.. குளவிகள் இனி கொட்டும்.. வைகோ கடும் எச்சரிக்கை

    விசாரணை

    விசாரணை

    ஆனால் இப்படி பேசியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட புகழேந்தி, இந்த வீடியோவை வெளியிட்ட அமமுக ஐடி விங் எதற்காக என் மானத்தை வாங்குகிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விஷயம் குறித்து தினகரன் கருத்து சொல்லும்போது, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டிப்புடன் தெரிவித்திருந்தார்.

    அமமுக

    அமமுக

    ஆக.. புகழேந்தி அமமுகவில்தான் இருக்கிறாரா என்று உறுதியாக நமக்கு தெரியவில்லை. அதே சமயம், வேறு கட்சிக்கு தாவப் போவதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன. மாற்று கட்சிக்கு குறிப்பாக, திமுக பக்கம் புகழேந்தி போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்த வீடியோ அமமுக தரப்பில் வெளியிடப்பட்டதாகவும் சலசலக்கப்பட்டது.

    குழப்பம்

    குழப்பம்

    இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவில், இன்று தினகரன் ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளார். அது அமமுக செய்தி தொடர்பாளர்கள் பெயர் பட்டியல்தான். அதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல், என 14 பேர் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. முக்கியமாக சிஆர் சரஸ்வதி பெயர்கூட இடம்பெற்றுள்ளது.. ஆனால் செய்தி தொடர்பாளராக இதுநாள்வரை இருந்து வந்த புகழேந்தியின் பெயர் இல்லை. என்ன காரணம் என்றும் தெளிவாக தெரியவில்லை.

    புறக்கணிப்பு?

    புறக்கணிப்பு?

    விசாரித்து முடிவு எடுக்கிறேன் என்று தினகரன் சொல்லி இருந்தநிலையில், இன்னமும் அந்த வீடியோ பற்றி விசாரித்து வருகிறாரா அல்லது அமமுகவில் இருந்தே புகழேந்தி புறக்கணிக்கப்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. சசிகலாவின் தீவிர விசுவாசியாகவே தன்னை காட்டிக் கொள்ளும் புகழேந்தி, இப்போதைய முக்கியமான லிஸ்ட்டில் கூட தன் பெயர் இல்லாமல், தினகரன் வெளியிட்ட இந்த அதிரடி அறிவிப்புக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    பதிலடி

    பதிலடி

    இந்நிலையில், அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே புகழேந்தி பதிலடி தந்துள்ளார். அதில், "இதுவரைக்கும் நான் எந்தக்கட்சிக்கும் செல்லவில்லை. அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் வரவில்லை. அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே என்னுடையது. ஏனென்றால், அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். யாரையும் நம்பி நான் கிடையாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமமுகவில் பரபரப்பு சூழல் காணப்படுகிறது.

    English summary
    Senior Leader Pugazhendhi Name was missing AMMK Spoke Persons list today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X