சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்!

சிஆர்பிஎப் வீரர்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்காமல் அரசு ஏமாற்றிவிட்டது என்று புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் மனைவி பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்... 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலி- வீடியோ

    சென்னை: சிஆர்பிஎப் வீரர்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்காமல் அரசு ஏமாற்றிவிட்டது என்று புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் மனைவி பேட்டியளித்துள்ளார்.

    புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காரணமே இந்தியாவே கொதித்து போய் இருக்கிறது.

    காஷ்மீர் தொடங்கி கன்னியகுமரி வரை இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு பேர்

    இரண்டு பேர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள சிவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் இந்த தாக்குதலில் பலியானார். அதேபோல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

    தமிழகம் முழுக்க

    தமிழகம் முழுக்க

    இவர்கள் இருவருக்கும் தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது. கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் தொடங்கி, வடக்கே ஓசூர் எல்லை வரை பல இடங்களில் இவர்கள் இருவருக்கும் இரங்கல் தெரிவித்து பேனர்கள், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பல்வேறு அமைப்பு சார்பாக வைக்கப்பட்டு இருந்தது.

    மக்கள் அஞ்சலி

    மக்கள் அஞ்சலி

    அதேபோல் தமிழகம் முழுக்க மக்கள் பலர் இவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கு மட்டுமில்லாமல் மொத்தமாக 40 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் பல இடங்களில் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. சமூக வலைத்தளம் முழுக்க இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    மொத்தமாக சோகம்

    மொத்தமாக சோகம்

    இந்த மரணம் காரணமாக சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் சொந்த ஊரான சிவலப்பேரி சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறது. மேலும் சிஆர்பிஎப் வீரர் சிவசந்திரனின் ஊரான அரியலூரில் மக்கள் கடும் சோகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் குடும்பமும் மொத்தமாக இந்த மரணத்தால் நிலைகுலைந்து போய் உள்ளது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் ''அவரை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள். இவ்வளவு பேர் மொத்தமாக செல்லும் போது ஏன் இவ்வளவு குறைந்த பாதுகாப்பு அளித்தார்கள். நாம் இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் மீண்டும் எழுந்து வராத அளவிற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    அவர்களும் நல்லவர்கள்

    அவர்களும் நல்லவர்கள்

    சுப்பிரமணியனின் சகோதரர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், என்னுடைய பல நண்பர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்தான். அவர்களும் என்னுடைய சகோதரரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த முட்டாள்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரண்டு நாடுகளும் முன்னேற வேண்டும், என்றுதான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள், என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

    எல்லோரும் ஒன்றாக

    எல்லோரும் ஒன்றாக

    இந்த 40 பேரின் மரணம் அரசியல் தலைவர்கள், மக்கள் தொடங்கி பலரை ஒன்றாக சேர்த்து இருக்கிறது. காஷ்மீர் முதல் குமரி வரை மக்கள் இந்த மோசமான தாக்குதல் காரணமாக கொதித்து போய் உள்ளனர். முக்கியமாக தமிழகம் இரண்டு உயிர்களை பலிகொடுத்துவிட்டு பெரும் சோகத்தில் நிற்கிறது.

    English summary
    Pulwama attack: They cheated our Jawans says the wife of Tamilnadu CRPF man who died in the terror attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X