புஷ்பவனம் குப்புசாமி- அனிதா தம்பதி மகள் பல்லவி நிச்சயதார்த்தம்.. கலக்கல் போட்டோஸ்
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி- அனிதா தம்பதியின் மூத்த மகளுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாட்டுப்புற பாடகர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி. தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதைப் பெற்றுள்ள இவர், பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்திற்கு புஷ்பவனம் குப்புசாமியை துணைவேந்தராக நியமிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதி
பிரபல கிராமிய பாடகியான அனிதாவை தான் இவர் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது, இருவரும் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பல கச்சேரிகளிலும் ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டுள்ளனர். குப்புசாமி- அனிதா தம்பதி ஒன்றாக இணைந்தும் பல சினிமா பாடல்கள், டிவி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர்.

மகளுக்கு நிச்சயதார்த்தம்
மேலும், மக்களுக்கும் பல்வேறு உதவிகளையும் இந்த தம்பதி செய்து வருகிறது. குறிப்பாக, கஜா புயல் ஏற்பட்ட சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர். குப்புசாமி- அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி. பல் மருத்துவரான இவருக்கும் என்பவருக்கும் ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

நட்சத்திர விடுதி
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மோதிரம்
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், மணமகன் கவுதம் ராஜேந்திர மணமகள் பல்லவிக்கு மோதிரம் அணிவித்தார். அப்போது சுற்றியிருந்த குடும்பத்தினரும், நண்பர்களும் மலர் தூவி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வீடியோ
அதேபோல திரைப்படம் ஒன்றில் வடிவேலு பேசும் வசனத்தையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகச் செய்து பதிவிட்டுள்ளனர். மணமகன் கவுதம் ராஜேந்திர தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

பலரும் வாழ்த்து
இந்த நிகழ்வின் போது மணமகள் பல்லவி அழைத்து வரப்பட்ட விதம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. உறவினர்கள் புடைசூழ, அழகிய பந்தல் போன்ற அமைப்பின் கீழ் மணமகள் அழைத்துவரப்பட்டார். மேலும், நிச்சயதார்த்தத்தின் போது இருவீட்டாரும் தாம்பூலத்தை மாற்றிக் கொண்டனர், இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகியுள்ளது.