சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர்- அதிமுகவை தூக்கி எறிந்து புதிய ஆட்சி: டாக்டர் கிருஷ்ணசாமி

Google Oneindia Tamil News

சென்னை: புதிய தமிழகம் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவித்து தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:

Puthiya Tamilagam to announce Chief Minister Candidate for TN Assembly Elections

தமிழகத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோருக்கு டெல்லியில் மாதிரி நேர்முக தேர்வு நடத்தப்படும். மிகச் சிறந்த பேராசிரியர்கள் மூலம் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. டெல்லியில் வரும் 22,23 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த மாதிரி நேர்முகத் தேர்வுக்கு ஒரு வழி விமான கட்டணம் உள்ளிட்ட பொருளாதார உதவிகளை செய்திருக்கிறோம்.

மாத சம்பளதாரர்களே இந்த நாட்களில் கொஞ்சம் அலார்ட்டாகவே இருங்க.. கதறவிடும் ஏடிஎம்கள்!மாத சம்பளதாரர்களே இந்த நாட்களில் கொஞ்சம் அலார்ட்டாகவே இருங்க.. கதறவிடும் ஏடிஎம்கள்!

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்த வேண்டும். ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கட்டும். அதன்பிறகு கூட்டணி குறித்து எல்லாம் பேசலாம்.

நடிகர் விஜய் மீதான வருமான வரிசோதனைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்க கூடாது. அனைத்து நடிகர்களும் வருமான வரி சோதனைக்குள்ளாகி இருக்கின்றனர்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுக அரசை தூக்கி எறிந்து ஆட்சி அமைப்போம். புதிய தமிழகம் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கும்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் வரும் 27-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

English summary
Puthiya Tamilagam President Dr Krishnasamy said that his party will announce the Chief Minister Candidate for upcoming Tamilnadu Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X