சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அச்சம் வேண்டாம்.. 2015 வெள்ளம் ஏற்படாது.. பொதுப் பணித் துறை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 2015 ஆம் ஆண்டை போல் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் என யாரும் அஞ்ச வேண்டாம் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது - வீடியோ

    தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகவே இருந்தது.

    புயல் சின்னம் உருவாவதற்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியிருந்தது. இந்த நிலையில் தற்போது நேற்று சென்னையில் மழை பெய்து கொண்டே இருந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து 21.55 அடியை தாண்டியது.

    கடலூரை நெருங்கும் நிவர் புயல்.. நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்- வானிலை மையம் கடலூரை நெருங்கும் நிவர் புயல்.. நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்- வானிலை மையம்

    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரி

    24 அடியை கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக என பொதுப் பணித் துறை அறிவித்திருந்தது. வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்கப்படும். இதனால் ஏரி செல்லும் வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் சிறுகளத்தூர் , திருநீர்மலை, காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் ஆகிய கிராம பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆய்வு

    ஆய்வு

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். இதுகுறித்து முத்தையா கூறுகையில் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2015-ஆம் ஆண்டு நிரம்பியது. அத்துடன் தற்போதுதான் நிரம்பியுள்ளது. தற்போது நீரின் மட்டம் 21.67 அடியாக உள்ளது. 12 மணிக்கு நிச்சயம் 24 அடியாக நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு 4,050 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    2015 வெள்ளம்

    2015 வெள்ளம்

    கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம். இந்த ஏரி திறப்பானது கடந்த 2015 வெள்ளம் போல் ஏற்படாது. ஏரி நீரின் திறப்பு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் சென்றால்தான் அது போன்ற 2015 வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    19 சிறிய மதகுகள்

    19 சிறிய மதகுகள்

    எனவே பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம். கரையோர கிராம மக்கள் மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றார். இந்த ஏரியில் 19 சிறிய மதகுகளும், 5 பெரிய மதகுகளும் உள்ளன. நீர் அதிகரித்தால் தானாக திறக்கும் 2 கலங்கல் பகுதிகளும் உள்ளன. இந்த ஏரியின் நீளம் 9 கி.மீ. ஆகும். அடையாறு வழுதியம்மேடு கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    PWD officials review Chembarambakkam Lake and asked people not to panic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X