எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ‘வேட்டு’.. ஓபிஎஸ் டீம் போட்ட ‘கோ-வாரண்டோ’.. எடப்பாடிக்கு பெரிய சிக்கல்!
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி தரப்பு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என ஒரே போடாகப் போட்டு வழக்கை தொடர்ந்துள்ளது ஓபிஎஸ் டீம்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்து, அவர் இதுவரை பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் சார்பில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர், கோ வாரண்டோ வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட. வேட்பு மனுவில் சொத்துகள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மேலும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications