சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சளி, இருமல் இருக்கு.. கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைங்க.. நீதிபதியிடம் ஆர் எஸ் பாரதி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி தன்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.

R.S.Bharathi asked Judge to send him for Coronavirus test

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவரின் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம், ஆர்.எஸ். பாரதி கோரிக்கை விடுத்தார்.

1200 கி.மீ. சைக்கிள் பயணம்.. சகிப்புத்தன்மையின் சாதனை.. பீகார் சிறுமியை பாராட்டிய இவான்கா டிரம்ப்1200 கி.மீ. சைக்கிள் பயணம்.. சகிப்புத்தன்மையின் சாதனை.. பீகார் சிறுமியை பாராட்டிய இவான்கா டிரம்ப்

மேலும் தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு எழும்பூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

English summary
R.S. Bharathi demanded Judge to send him for Corona test as he is having cold and cough.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X