முரசொலி அலுவலக விவகாரம்.. உதயநிதிக்கு பதிலாக "அறங்காவலர்" ஆர் எஸ் பாரதி ஆஜர்!
சென்னை: முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்ற புகாரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்து வருகிறார்.
அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன்- படம் மட்டுமல்ல. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் ஜாதி வன்மத்தை கேள்விக் கேட்கும் துணிச்சல்காரன் என பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்துக்காக கையகப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் ஒப்படைப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கூறினார். புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முரசொலி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் உதயநிதி என்பதால் அவருக்கு வரும் 19-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அது போல் தமிழக தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!