சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக டூ அதிமுக டூ பிஜேபி.. ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ராதாரவி!

நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ராதாரவி!| Actor Radha Ravi joins BJP party

    சென்னை: நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

    நடிகர் ராதாரவி, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இவர் பிரச்சனையில் மாட்டுவது வழக்கம். முக்கியமாக பெண்களை மதிக்காமல் பேசுகிறார் என்றும் இவர் மீது புகார் இருந்தது.

    மிக முக்கியமாக மீ டூ போராட்டம் நடந்த சமயத்தில் அதற்கு எதிராக ராதாரவி பேசினார் என்றும் புகார் உள்ளது. சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் நடிகை நயன்தாராவிற்கு எதிராக இவர் பேசினார்.

    முன்னாள் பாஜக கையை சபாநாயகராக்கும் காங்கிரஸ்.. அதிரடி.. மகாராஷ்டிராவில் மாஸ் பிளான்!முன்னாள் பாஜக கையை சபாநாயகராக்கும் காங்கிரஸ்.. அதிரடி.. மகாராஷ்டிராவில் மாஸ் பிளான்!

    இரட்டை அர்த்தம்

    இரட்டை அர்த்தம்

    நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசினார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

    என்ன மோசம்

    என்ன மோசம்

    அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து திமுகவில் அப்போது அதிரடியாக ராதாரவி நீக்கப்பட்டார். ஆனால் அவர் தற்காலிக நீக்கம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து மொத்தமாக ராதாரவி அப்போதே தன்னை விலக்கிக் கொண்டார்.

    அதிமுகவில் சேர்ந்தார்

    அதிமுகவில் சேர்ந்தார்

    இதையடுத்து திமுகவில் இருந்து வெளியேறிய அவர் சில வாரங்களில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கட்சியில் தனக்கு மரியாதை உள்ளது என்று கூறி அவர் அதிமுகவில் இணைந்தார். தற்போது புதிய திருப்பமாக நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

    சென்னை வந்தார்

    சென்னை வந்தார்

    இன்று காலை சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பிரதமர் மோடியின் தலைமையை கண்டு ஈர்ப்பு அடைந்ததாகவும். அவருக்கு கீழ் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த செயல்படுவேன் என்றும் ராதாரவி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Radha Ravi joins BJP party infront of National Working president J P Nadda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X