சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் ராதாரவி.. 'பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்'... சின்மயி விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் ராதாரவியை சேர்த்ததன் மூலம் 'பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்' என பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி கேள்வி எழுப்பி இருக்கிறார்,

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராதாரவி அதிமுகவில் இருந்தார். அத்துடன் நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.விஷால், நாசர் அணியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றி பெற்றதால் நடிகர் சங்க பதவியில் இல்லை.

radha ravi on bjp : What message are you giving to women now? asked chinmayi

இதனிடையே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடிகர் ராதாரவி, அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.

இந்நிலையில் 'கொலையுதிர்காலம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ராதாரவி மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். கடந்த சில மாதங்கள் அதிமுகவில் இருந்த அவர் திடீரென அண்மையில் பாஜகவில் சேர்ந்தார். சென்னையில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார்

ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை.. நாடாளுமன்றத்தில் எம்பிகள் ஆவேசம்ஹைதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை.. நாடாளுமன்றத்தில் எம்பிகள் ஆவேசம்

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டுவிட்டுடன் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியையும் டேக் செய்துள்ளார்.

அந்த பதிவில், பெண்களை இழிபடுத்தும் வகையில் ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார் என்றும் ராதாரவி டப்பிங் யூனியனில் தலைவராக இருந்தபோது அவரிடம் கேள்வி எழுப்பினாலோ அல்லது பாலியல் புகார் தெரிவித்தாலோ தடை விதித்துவிடுவார்கள் என்றும், பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் "பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
actor radha ravi join bjp on resently xdq : What message are you giving to women now? asked chinmayi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X