• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாணவர்கள் கல்லறை மீது ஏறி நின்று, அரசியல் செய்யாதீர்கள்.. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை ஆவேசம்

|

சென்னை:மாணவர்கள் கல்லறை மீது ஏறி நின்று திமுக அரசியல் செய்யக் கூடாது என்று, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை (அதிமுக) சட்டசபையில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டசபையில் இன்பதுரை பேசியதாவது: நீட் தேர்வு அவசியம் இல்லை, அதற்காக ஒரு அவசர தீர்மானத்தை இயற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து நான் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. நீட் எவ்வாறு வந்தது, எப்படி வந்தது?

அக்டோபர் 21ம் தேதி, 2010ம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த, திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் காங்கிரஸ் அரசால் நீட் கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டத்திற்கு, அப்பொழுது அந்த கூட்டணியில் அங்கம் வகித்த திராவிட முன்னேற்றக் கழகம் முட்டுக் கொடுத்ததா, இல்லையா? இது தான் என்னுடைய கேள்வி.

பாவம்யா... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

திமுக ஆதரவோடு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது தான் நீட். ஆளும் அதிமுக அரசு இதில் என்ன செய்தது என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்கள் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். ஜெயலலிதா இருக்கும் போது தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை. 2016 ஆம் ஆண்டு நீட்தேர்வு வந்த போது அதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

திமுக எதிர்க்கவில்லை

திமுக எதிர்க்கவில்லை

அதற்குப் பின்பு 2016ல் மாநிலங்களவையில் இந்த சட்டம் குறித்து விவாதம் வந்தபோது திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் இருந்தார்கள். யாரும் எதிர்க்கவில்லை. வெளிநடப்பு செய்யவில்லை. டிவிஷன் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் உங்கள் எதிர்ப்பு பதிவாகியிருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு மாணவர்கள் கல்லறை மீது ஏறி நின்று, அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களானால், கோயபல்ஸ் கூட உங்களை பார்த்து வெட்கப்பட்டு விடுவாரா இல்லையா?

நீட் நடைபெறவில்லை

நீட் நடைபெறவில்லை

திமுக ஆதரவோடு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது தான் நீட். ஆளும் அதிமுக அரசு இதில் என்ன செய்தது என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்கள் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். ஜெயலலிதா இருக்கும் போது தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை. 2016 ஆம் ஆண்டு நீட்தேர்வு வந்த போது அதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது திமுகவின் டெல்லி நண்பராக இருக்க கூடியவரின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஆதரவாக வாதாடினார். துருப்பிடித்த ஆயுதங்களைக் கொண்டுவந்து, போரிட்டு, வரலாற்றை திரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஒரு நல்ல வாய்ப்பு கெடுத்து விட்டீர்கள்.

 எடப்பாடியார் அலை

எடப்பாடியார் அலை

திராவிட முன்னேற்ற கழகம் குழம்பிப் போயிருக்கிறது. தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் எடப்பாடியார் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அரியர் தேர்வில் இருந்து விலக்கு என்று சொன்னதும், நீங்கள் யூ டர்ன் அடித்தீர்கள். அரியர் தேர்வு எழுதிய அனைவரும் பாஸ் செய்வது என்பது நடைமுறைக்கு உதவாது என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது. நீங்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு இடையூறு செய்து வருகிறீர்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று வருகிறபோது உள்ளே வாக்களித்து விட்டு வெளியே வந்து எதிர்த்தீர்கள். இவ்வாறு ராதாபுரம் சட்டசபை உறுப்பினர் இன்பதுரை உரையாற்றினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Radhapuram Aiadmk MLA I. S. Inbadurai slams DMK over neet exams in Tamil Nadu assembly. He accuses DMK for confusing the students.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X