சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

151 ஓட்டுகள்.. அதில்தான் திருப்பு முனை.. அதிமுகவிடமிருந்து திமுகவிடம் செல்கிறதா ராதாபுரம் தொகுதி?

Google Oneindia Tamil News

சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், 151 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.

இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். வெறும், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.. ரிசல்ட்டே மாறலாம் ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.. ரிசல்ட்டே மாறலாம்

தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியர்

ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து, அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இந்த நிலையில்தான், 203 தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 19, 20, 21 என கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதாக அப்பாவு தெரிவித்தார். எனவே, இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு எந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.

151 ஓட்டுக்கள்

151 ஓட்டுக்கள்

முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அலுவலரிடம், அப்பாவு வாக்குவாதம் செய்தார். சரியாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், 151 வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன், என்று தெரிவித்திருந்தார். எனவே ஒருவேளை தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், இந்த அளவுக்கான, வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்பதுரை மனு

இன்பதுரை மனு

அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

English summary
If the recounting is held in the Radhapuram constituency, the political field is heated up as the DMK candidate is likely to win by 151 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X