சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாடகை தராட்டி வெளியேற்றுவேன்.. எதிர்வீட்டுக்காரன் அமைதியாக இருக்கணும்.. ராதாரவி ஷாக் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: என் வீட்டில் தங்கியிருக்கும் நபர் வாடகை தராவிட்டால் அவரை நான் வெளியேற்றுவேன். அதை பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்வீட்டுக்காரன் அமைதியாக இருக்க வேண்டும் என ராதாரவி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

வடமாநிலங்களில் இதற்கான போராட்டம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்ப்போர் குறித்து ராதாரவி விமர்சனம் செய்துள்ளார்.

வாடகை

வாடகை

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் என் வீட்டில் தங்கியிருக்கும் நபர், வாடகை கொடுக்காவிட்டால் நான்தான் வெளியேற்றுவேன்.

போராட்டம்

போராட்டம்

எதிர்வீட்டுக்காரன் அமைதியாக இருக்க வேண்டும். இந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து கையெழுத்து போட்டவர்கள்தான் தற்போது போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

பாஜகவில் வானதி சீனிவாசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராகும் வாய்ப்பும் தகுதியும் உள்ளது என ராதாரவி தெரிவித்துள்ளார். இவர் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் திமுகவுக்கு வந்தார்.

பாஜகவில் இணைப்பு

பாஜகவில் இணைப்பு

அங்கு நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் வந்த ஜேபி நட்டாவை சந்தித்து ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அடுத்த பாஜக தலைவர் யார் என்பது குறித்து மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன் உள்ளிட்டோரே அமைதி காக்கும் நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்த ராதாரவி இதுபோன்ற கருத்து சொன்னதால் வானதி எதிர்ப்பாளர்களும் மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
BJP member Radharavi says that if my tenant not paying rent means i have to oust him, opposite house owner should not oppose it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X