சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்போலாம் கட்சியை யார் நடத்துறாங்க.. யார் தலைவருனே தெரியலை.. ராதாரவி சுளீர் பேச்சு.. யாரை தெரியுதா?

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதெல்லாம் கட்சியை யார் நடத்துறாங்க, யார் தலைவர்னே தெரியலை, அதெல்லாம் அரசியல் விவகாரம், நமக்கு எதுக்கு, நான் சினிமாக்காரன் என அதிமுகவை மறைமுகமாக நடிகர் ராதாரவி விமர்சித்து பேசினார்.

வில்லன், காமெடி, குணச்சித்திர நடிகரான ராதாரவி ஒரு அரசியல்வாதியும் கூட. அவர் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்த ராதாரவி 2001- 2006 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

இதையடுத்து அதிமுகவில் பல ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் அவர் திமுகவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தாவினார். அப்போது ஒரு கூட்டத்தில் நயன்தாரா குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.

இந்தியாவில் 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. ஒரே நாளில் 488 பேர் உயிரிழப்பு..!இந்தியாவில் 3.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. ஒரே நாளில் 488 பேர் உயிரிழப்பு..!

பாஜகவில் இணைந்த ராதாரவி

பாஜகவில் இணைந்த ராதாரவி

இதையடுத்து அதே ஆண்டு பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ராதாரவி எந்த கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சிகளை கடுமையாக அவதூறாக ஆபாசமாக விமர்சிப்பார்.

பெரிய ரவுடி

பெரிய ரவுடி

இதனால் இவர் திமுக, அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி பேசுகையில், பட விழாவுக்காக அடிக்கடி வெளியூருக்கு போவோம். அப்போது நடிகர் மயில்சாமிதான் பெரிய ரவுடி மாதிரி நடந்து கொள்வார். போகிற இடத்தில் எல்லாம் எல்லாரையும் அடித்து விடுவார். இப்படி ஒரு ஹோட்டல்ல வேலை செய்யும் ஆளை அடித்துவிட்டார்.

காமெடி

காமெடி

இதனால் அந்த ஹோட்டல் ஓனர் எங்க மேல கோபப்பட்டு எங்களை பிடிக்கிறதுக்கு ஆள்களை அனுப்பிவிட்டார். எப்படியும் நாங்கள் சென்னை திரும்ப ரயில்நிலையத்திற்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதை அறிந்த அந்த ஓனர், மயில்சாமியின் அங்க அடையாளங்களை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அவரோ பிளாட்பார்மில் படுத்திருந்த ஆட்களுடன் போய் படுத்துகிட்டாரு என நகைச்சுவை கலந்து ராதாரவி கூறினார்.

இதெல்லாம் அரசியல்

இதெல்லாம் அரசியல்

அவர் மேலும் பேசுகையில் நல்ல வேளை அரசியல் தலைவர்கள் எல்லாம் நல்ல காலத்துலேயே போய் சேர்ந்துட்டாங்க. இப்போ காலம் சரியே இல்லை. இப்போ யார் தலைவர் ஆகுறாங்க, யார் கட்சியை நடத்துறாங்கன்னே தெரியவில்லை. இதெல்லாம் அரசியல் விவகாரம். நமக்கு எதுக்கு, நான் சினிமாக்காரன், எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.

English summary
Actor and politician Radharavi reveals information about Mayilsamy and says that he is big rowdy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X