சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போபர்ஸ், ரஃபேலை சமமாகவே பார்க்கணும்... புத்தகத்தை வெளியிட்டு ராம் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale deal book: தடையை மீறி ரஃபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிட்டு ராம் பரபரப்பு பேட்டி- வீடியோ

    சென்னை: 'நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்று தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை தடைகளை தாண்டி பத்திரிக்கையாளர் என்.ராம் வெளியிட்டுள்ளார்.

    ரஃபேர் ஊழல் குறித்த புத்தகத்தை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் இன்று காலை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    rafale deal book launched in chennai after election commission permission

    இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் புத்தகங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயத்தில் தடைகளை தாண்டி ரஃபேல் பேர ஊழல் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட்டது.

    பத்திரிக்கையாளர் என்.ராம், எழுத்தாளர் விஜயன் உள்பட பத்திரிக்கையாளர் குழுவினர் இணந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஃபேர் ஊழல் குறித்த புத்தகத்தை பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் வெளியிட்டார். அதை கிருஷ்ணன் என்பவர் பெற்றுக்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்! காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஃபேல் பேர ஊழல்' புத்தகத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த தவறை தேர்தல் ஆணையம் சரிசெய்துவிட்டது. இதற்காக தேர்தல் அதிகாரிகளை பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை பார்த்து இதில் தொடர்புடையவர்கள் பயப்படுகிறார்கள். இந்த புத்தகத்தை நான் எழுதவில்லை. விஜயன் எழுதி இருக்கிறார். ரஃபேர் ஊழலை தமிழகத்தில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த புத்தகத்தை படித்த பிறகு தெரியும். போபர்ஸ், ரஃபேலை சமமாகவே பார்க்க வேண்டும். ரஃபேர் விமானம் வாங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

    English summary
    rafale deal book launched in chennai after election commission permission, N Ram appreciate election commission in this book release function
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X