சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித் மீண்டும் வருவான்.. நான் சொல்வதை செய்யுங்க.. செலவை கூட நானே ஏத்துகிறேன்.. ராகவா லாரன்ஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா சுதாரித்தது.. இந்தியா சுர்ஜித்தை இழந்தது ! | The Story of Jessica mcclure

    சென்னை: சுஜித் மீண்டும் வருவான், நான் சொல்வதை செய்யுங்கள். செலவை கூட நானே ஏற்கிறேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்தான். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவனை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன.

    இந்த நிலையில் அவன் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஒரு கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?

    பெற்றோருக்கு எனது வேண்டுகோள்

    பெற்றோருக்கு எனது வேண்டுகோள்

    அவர் கூறுகையில் சுஜித் மீண்டும் வருவான் அவனது பெற்றோருக்கு
    எனது வேண்டுகோள். குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் அக்டோபர் 29 எனது பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை. "ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

    பெற்றோர் இல்லாத பிள்ளை

    பெற்றோர் இல்லாத பிள்ளை

    இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது.. சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள்.

    சாந்தியடையும்

    அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ". அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான்.

    படிப்பு செலவு

    படிப்பு செலவு

    அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Raghava Lawrence writes letter to Sujith's parents to adopt a child and name him Sujith. If they adopt he will take care of education expenses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X