சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்தம் ரூ.15,88,77,083 சொத்து.. அம்மாவிடம் 5 லட்சம் கடன்.. ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் அடடே

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi: பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்தார் ராகுல் காந்தி- வீடியோ

    சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி தவிர்த்து வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

    வேட்புமனு தாக்கலின்போது, தன் சொத்து விபரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. அதில் ராகுல் காந்தி தனக்கு, 15.88 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சொத்துக்கள் குறித்த விவரங்கள் தற்போது பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பைவிட ராகுல் காந்தி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    சோனியாவிடம் கடன்

    சோனியாவிடம் கடன்

    கடந்த, 2017-18ம் ஆண்டில், தனக்கு, 1.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார். மேலும், தன் தாய் சோனியா காந்தியிடம், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. தனக்கு ரூ.72 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், ராகுல் காந்தி தனக்கு, ரூ. 9.4 கோடிக்கு சொத்து இருந்ததாக, ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசையும், அசையா சொத்துக்கள்

    அசையும், அசையா சொத்துக்கள்

    ராகுல் காந்தியிடம், ரூ.5,80,58,799 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.10,08,18,284 மதிப்புக்கு அசையா சொத்துக்களும் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் அவரின் சொத்து மதிப்பு ரூ.15,88,77,083.

    டெபாசிட், பங்குகள்

    டெபாசிட், பங்குகள்

    ராகுல் காந்தியிடம் ரூ.40,000 ரொக்கப் பணம் கையிருப்பு உள்ளதாம். பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ. 5.19 கோடி மதிப்புக்கு பத்திரங்கள், பங்குகள், மியூச்சுவல் ஃபன்ட் முதலீடுகளை கொண்டுள்ளார். 333.3 கிராம் தங்கம் உள்ளது.

    கார் இல்லையாம்

    கார் இல்லையாம்

    ராகுல் காந்தி எம்ஃபில் படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1995ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் இந்த பட்டத்தை அவர் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனக்கு சொந்தமாக கார் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு படை வாகனத்தில்தான் தான் பயணிப்பதாக கூறியுள்ளார் அவர்.

    English summary
    The Congress chief Rahul Gandhi does not own a car and as an SPG protectee he is required to travel in an SPG vehicle for security reasons. Rahul Gandhi has declared movable assets to the tune of Rs 5,80,58,799 and immovable assets worth Rs 10,08,18,284, with his total assets being worth Rs 15,88,77,083.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X