சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்!

ஈரோட்டில் நெசவாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்

Google Oneindia Tamil News

சென்னை: லட்சுமியின் சுறுசுறுப்பு.. லட்சுமியின் சமயோஜின புத்தி.. லட்சுமியின் எளிமையான இங்கிலீஸ்.. போன்றவற்றை பார்த்து ராகுல்காந்தியே அசந்துபோய்விட்டார்.. ஒரே நாளில் ஈரோட்டை கலக்கினார் இந்த பெண்.. யார் இந்த லட்சுமி?

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் அதல பாதாளத்தில் தொங்கி கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் வீறு கொண்டு எழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..

பாஜகவின் வியூகங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாவிட்டாலும், திமுக கூட்டணியில் இணைந்து, அந்த கட்சியையும் சேர்த்து வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அக்கட்சி உள்ளது.
அதனால்தான், ராகுல்காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

"வணக்கம்" என்று தமிழில் சொல்லி, பிரச்சாரத்தை ஆரம்பிப்பது ராகுலின் பழக்கம்.. அதுபோல, எந்த மாநிலத்துக்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், அங்குள்ள ரோட்டோர டீ கடைகளில் டீ சாப்பிடுவது, குடிசைகளுக்குள் சென்று சப்பாத்தி சாப்பிடுவது என கலக்கிவிடுவார்.. இதைதான் அவரது அப்பா ராஜீவ்காந்திதான் செய்து வந்தார்.. மக்கள் மனங்களில் ராஜீவ் எளிதாக குடிபுகுவதற்கு இந்த எளிமையே காரணம்.. அது போலவே ராகுலின் பிரச்சாரங்கள் கடந்த 15 வருஷமாகவே இருந்து வருகிறது.

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இதே அணுகுமுறையைதான் இப்போதை தமிழக பிரச்சாரங்களிலும் கடைப்பிடித்தார்.. கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது... அதனால் கோவையில்தான் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்... அதேசமயம், வழக்கமான பிரச்சாரமாக இது இருந்துவிடாமல், சற்று ஊடுருவி மக்கள் பிரச்சனைகளையும் கையில் எடுத்தால்தான், ஓரளவு வாக்கு வங்கி கிடைக்கும் என்றும் கணக்கு போட்டது.. அதனால், நேரடியாக மக்கள் பிரச்னையை கையில் எடுக்கவேண்டும், களத்தில் நின்று மக்களுக்காக தோள் கொடுக்க வேண்டும் என்ற முடிவையும் அக்கட்சி எடுத்திருந்தது.

 நெசவாளர்கள்

நெசவாளர்கள்

அந்த வகையில், ஈரோட்டில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் ராகுல்காந்தி மேற்கொண்டார்.. அந்த தொகுதி முழுவதுமே பெரும்பாலும் நெசவு தொழிலாளர்கள் என்பதால், அவர்களிடம் ராகுல் நேரடியாகவே பேசினார். அப்போது, சாமான்ய மக்கள் தமிழில் கேட்ட கேள்விகளை ராகுலிடம் மொழி பெயர்த்து சொன்னவர்தான லட்சுமி.. தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் லட்சுமி.. மகளிர் காங்கிரஸ்.. சென்னை ஐஐடியில் படித்த பெண்மணி.. ரொம்பவும் சிம்பிளான வார்த்தைகளை கொண்டு அதை அழகாக மொழிபெயர்த்து ராகுலிடம் சொல்லி கொண்டே இருந்தார்..

 ஹைலைட்

ஹைலைட்

அந்த வகையில் அந்த நிகழ்ச்சி முழுவதுமே லட்சுமி அனைவரையும் ஈர்த்துவிட்டார்.. இதில் ஒரு படிமேலே போய் ரேவதி என்ற பெண் ஹைலைட் ஆகிவிட்டார். இந்த ரேவதி யார் என்றால், அவர் ஒரு நெசவு கூலி தொழிலாளி.. கால் மிதியடிகளை, தன் கையாலேயே நெய்பவர்.. ஆனால், முன்புபோல் தான் தயாரித்த பொருட்கள் எதுவுமே விற்பனை ஆவதில்லை, நஷ்டம் அடைந்துவிட்டது என்று ரேவதி தமிழில் புலம்பினார்.. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து லட்சுமி ராகுலிடம் சொன்னார்..

ரேவதி

ரேவதி

உடனே ராகுல், "ரேவதி, உங்க கஷ்டமான சூழல் புரிகிறது... உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்.. நீங்க கையாலேயே நெய்த அந்த கால் மிதியை என்கிட்ட கொடுங்க.. இப்பவே தாங்க.. உங்களுக்கு நான் உதவி செய்றேன்.. என்னால ஒரு ரேவதியின் பிரச்சனையாவது இன்றே தீரட்டும்.. எனக்கு இப்பவே நீங்க தயாரித்த பொருள் ஒன்னு வேணும்.. நான் போய் கண்டிப்பா எல்லா இடத்திலும் சொல்வேன், தமிழ்நாட்டில் ரேவதியின் கால்மிதியடியை வாங்குங்கள்.. ரேவதிக்கு உதவுங்கள் என்று சொல்வேன்" என்றார்.

 அரங்கம்

அரங்கம்

ராகுல் இப்படி பேசியதுமே அரங்கமே அதிர்ந்து போய்விட்டது.. இப்படி ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் கேட்டு, அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தார் ராகுல்.. இந்த விழாவில், மற்றொரு குறிப்பிடத்தகுந்த நபர் இம்ரான் என்பவர்.. இவர்தான் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளை ராகுலிடம் செய்து கொண்டிருந்தார்.. நிகழ்ச்சியை அருமையாக நடத்தினார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அதுமட்டுமல்ல, வேறெந்த தமிழக தலைவர்களும், ஏன்.. எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட செய்யாத ஒரு விஷயத்தை ராகுல் அரங்கேற்றியது ஒரு அழகான உணர்வுப்பூர்வ தருணம் என்றே சொல்லலாம்.. மொத்தத்தில் எளிமையான உடல்மொழி, மொழி சிக்கலையெல்லாம் தாண்டிய நிஜமான அக்கறையோடு ஆர்வமுடன் நெசவாளர்களோடு ராகுல் உரையாடி ஒரு ஆச்சரியத்தை ஈரோட்டில் பதிய விட்டு சென்றுள்ளார்..!

English summary
Rahul Gandhi discussed with weavers in his Erode Election campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X