சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மோடியை விட கிடுகிடுவென உயர்ந்த ராகுல் காந்தி செல்வாக்கு - இந்தியா டுடே சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செல்வாக்கு கூடியுள்ளதும், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளதும், இந்தியா டுடே நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இந்தியா டுடே டிவி சேனல், 'ஆக்சிஸ் மை இந்தியா' இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில், மத்திய அரசு மீதான மக்களின் திருப்தி கூடியுள்ளதா, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.

3 மாதங்களில் எடப்பாடி அரசு குறித்த மக்கள் மனநிலையில் இத்தனை மாற்றங்களா?.. இந்தியா டுடே சொல்வது என்ன?3 மாதங்களில் எடப்பாடி அரசு குறித்த மக்கள் மனநிலையில் இத்தனை மாற்றங்களா?.. இந்தியா டுடே சொல்வது என்ன?

அதில் பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, நரேந்திர மோடி செல்வாக்கு குறைந்துள்ளதும், ராகுல் காந்தி செல்வாக்கு உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தென் மாநிலங்களிலேயே அதிகம்

தென் மாநிலங்களிலேயே அதிகம்

இந்த கருத்துக் கணிப்பில் கூறியுள்ள சுவாரசிய தகவல்கள்: மத்திய நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்ததாக கடந்த அக்டோபர் மாதம், தமிழகத்தில், 24 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சர்வேயிலும், அதே அளவுக்கான மக்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் இதைவிட அதிக மக்கள் மோடி அரசின் மீது திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தமிழகம்தான் தென் மாநிலங்களிலேயே, மத்திய அரசு மீது குறைந்த திருப்தி கொண்ட மாநிலமாக உள்ளது.

மோடி அரசு மீது அதிருப்தி

மோடி அரசு மீது அதிருப்தி

அதேநேரம் மோடி அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று கூறுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் 38 சதவீதம் பேர் திருப்தியில்லை என்று தெரிவித்த நிலையில், ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து மோடி அரசு மீது 41 சதவீத மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

ராகுல் காந்திக்கு ஆதரவு

ராகுல் காந்திக்கு ஆதரவு

யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கடந்த அக்டோபர் மாதம் 36% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மூன்று மாதங்களில் இது 3 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஜனவரி மாதம் எடுத்த கருத்துக் கணிப்பில் ராகுல்காந்திக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

மோடி செல்வாக்கு

மோடி செல்வாக்கு

அதேநேரம் அக்டோபர் மாதம் 29% பேர் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று விரும்பிய நிலையில் தற்போது 28 சதவீதம் பேர்தான் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி ராகுல் காந்தியை விட மோடிக்கு 11% தமிழகத்தில் செல்வாக்கு குறைவாக இருப்பது தெரிய வருகிறது.

English summary
28 pecent of Tamil Nadu people prefer Narendra Modi as next PM but Rahul Gandhi is their preferred PM candidate, India Today survey reveals
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X