• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவுக்கு செம "ஜெர்க்"காமே.. கூட்டணியில் நின்னாலும்.. சிங்கம் மாதிரி நிக்கணும்.. ராகுலின் ஸ்கெட்ச்

|

சென்னை: ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே செம உற்சாகம் கரைபுரண்டோடுகிறதாம். இதுவரை அவர் வந்து போன விதத்தில், பாஜகவின் ஸ்டிராட்டஜியை முற்றிலும் தகர்த்து விட்டதாக அரசியல் நிபுணர்களும் கூட சொல்கிறார்கள்.

மோடி வந்தார் பேசினார்.. அமித்ஷா வந்தார் பேசினார்.. ராஜ்நாத் சிங் வந்தார்.. இன்னும் பிற தலைவர்களும் கூட பாஜகவுக்காக வந்தனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி மட்டும்தான் வருகிறார். இதுவரை வந்த பயணங்கள் மூலம் தமிழக மக்கள் மனதில் நிலையாக நின்று விட்டார் என்று சொல்கிறார்கள்.

முதல் பயணத்தின்போது கிராமப்புற சமையலில் இறங்கி தமிழக மக்களை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் நாட்டையே அதிர வைத்தார் ராகுல் காந்தி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை... அதை விட அவர் பேசிய தமிழ்தான் பாப்புலரானது... இது செமையாக ஒர்க்கவுட் ஆனது. இதை பாஜகவும் கூட எதிர்பார்க்கவில்லை.

 மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு!

செல்பி

செல்பி

அடுத்த பயணத்தில் அவர் செல்பி எடுத்த போட்டோக்கள் வைரலானது... சிறுமி ஒருவரின் உடையை சரி செய்தது, மாணவிகளுடன் இணைந்து செல்பி எடுத்தது வைரலானது.. மக்களின் மனதைத் தொட்டது. அடுத்து அவர் பள்ளி மாணவியுடன் போட்டி போட்டு தண்டால் எடுத்தது ரொம்பவே வைரலானது. இளைஞர்கள் மனதை ரொம்பவே தொட்டு விட்டார் ராகுல் காந்தி எந்று சொல்கிறார்கள்.

கேலி

கேலி

ஒரு தலைவரிடம் இருக்கும் பந்தா இவரிடம் இல்லை. அண்ணன் மாதிரி நடந்து கொள்கிறார்.. ரொம்ப இயல்பாக இருக்கிறார். அடுத்தவர்கள் நம்மை கேலி செய்வார்களோ என்ற பதட்டமோ பயமோ இவரிடம் இல்லை. ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார். இதுதான் எங்களைக் கவர்ந்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் புதிய பலமாக மாறியுள்ளது.

 ராகுல்

ராகுல்

தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் எல்லாம் பக்காவாக திட்டம் போட்டு என்னென்னவோ செய்து கொண்டுள்ளன. ஆனால் படு சிம்பிளாக இதையெல்லாம் தூள் தூளாக்கி வருகிறார் ராகுல் காந்தி என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக காங்கிர்ஸ கட்சியின் செசல்வாக்கு தமிழகத்தில உயர ராகுல் காந்தியின் வருகை உதவும எந்றும் சொல்லப்படுகிறது.

திமுக

திமுக

இந்த நேரத்தி்ல இது மிகவும் தேவையாகவும் இருக்கிறது காங்கிரஸுக்கு. காரணம் திமுகவுடன் சீட் கேட்டு ரொம்பவே போராடிக் கொண்டுள்ளLது. இந்த நேரத்தில் ராகுல் காந்தி மூலம் பூஸ்ட் கிடைக்கும்போது நிச்சயம் அதை திமுகவும் மனதில் கொண்டு சீட் கொடுப்பதில் இறங்கி வரும் ன்று காங்கிரஸ் கணக்கு போடுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டறங்களில் ராகுல் காந்திக்கு நல்ல மவுசு கூடியுள்ளதாகவும் சொல்கிறார்கள். அவரது அந்த கிராமப்புற சமையல் வீடியோ இன்று வரை வைலராகிக் கொண்டுள்ளது. அதைப் பார்ப்போர் அநைவருமே ராகுலை பாராட்டத் தவறுவதில்லை. இது நிச்சயம் காங்கிரஸுக்கு நல்ல இமேஜைக் கொடுத்துள்ளது.

 எளிமை

எளிமை

ராகுல் காந்தி சிம்பிளாக இருக்கிறார். ஜாலியாக பேசுகிறார்.. இறங்கி வருகிறார் கெத்து காட்டுவதில்லை. பந்தா செய்வதில்லை.. வளவளா பேச்சு கிடையாது... எதார்த்தமாக பேசுகிறார்... பிராக்டிகலாக இருக்கிறார். நான் உங்களில் ஒருவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்... எதையும் செட்டப் செய்து பண்ணுவதில்லை. இதுதான் ராகுல் காந்தி குறித்த இமேஜாக மக்கள் மனதில் மாறீியுள்ளது.

 கூட்டணி

கூட்டணி

ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் இந்த செல்வாக்கை பாஜகவை விட திமுகதான் அதிக அச்சத்துடன் பார்க்கிறது. காரணம், இந்த நேரத்தில் காங்கிரஸை விரட்டி விட்டால் அது திமுகவுக்கே பெரும் பாதகமாக போய் முடியும் என்றும் சொல்கிறார்கள். எனவே சீட் விவகாரத்தில் நிசச்யம் திமுக இறங்கி வர ராகுல் காந்தியின் பிரசாரம் உதவும என்றும் நம்பப்படுகிறது.. பார்க்கலாம்..!

 
 
 
English summary
Rahul Gandhi's visit to Tamil Nadu is said to be a setback for the DMK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X