சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான அறிவுரை ஒன்றை சொல்லி இருக்கிறார். தேர்தல் தோல்வியை அடுத்து ராகுலுக்கு ரஜினி அறிவுரை சொல்லி இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம் இந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.

    இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக முடிவெடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுலின் இந்த முடிவு குறித்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

    தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை.. ஒருவழியாக ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை.. ஒருவழியாக ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    சென்னையில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் இருப்பதால் அதை நிர்வகிப்பது கடினம். காங்கிரஸ் கட்சி மிகப்பெரியது. அதை நிர்வகிப்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. காங்கிரஸ் கட்சியை இளமையான ராகுல் நிர்வகிப்பது கடினம்தான்.

    ராகுல் காந்தி காங்கிரஸ்

    ராகுல் காந்தி காங்கிரஸ்

    ஆனால் அதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விளக்க கூடாது. அவர் தன்னால் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அவரால் தனக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். இப்போது ராகுல் பதவி விலக யோசிப்பது சரியாக இருக்காது.

    எதிர்க்கட்சிகள் அவசியம்

    எதிர்க்கட்சிகள் அவசியம்

    ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் அவசியம் தேவை. அதேபோல் எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக வலுவான கட்சியாக இருக்க வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஒரு அலை

    ஒரு அலை

    பொதுவாக ஒரு நபருக்கு ஆதரவாக அலை வீசினால் அவர்தான் வெற்றிபெறுவார். ஒரு ஆதரவு அலைக்கு எதிராக யாரும் நிற்க முடியாது. மோடிக்கு ஆதரவான அலை வீசியது. அந்த அலையில் எல்லோரும் அடித்துக் கொண்டு சென்றுவிட்டனர், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    He (Rahul Gandhi) should not resign. He should prove he can do it. In democracy the opposition should also be strong.This victory is a victory for Modi. He is a charismatic leader. In India after JL Nehru and Rajiv Gandhi he is now a charismatic leader. I will be going for the swearing in ceremony of Narendra Modi ji.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X