• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..!

|

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வருகிறார்.

    சென்னை: மண்பானை சமையலும்.. விவசாயிகளின் சந்திப்பும்.. ராகுலின் பரபர தமிழக சுற்றுப்பயணம்..!

    டெல்லியிலிருந்து நேராக கோவை சென்றடையும் அவர் அங்கிருந்து ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவுள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

    ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு;

    ராகுல் பயணம்

    ராகுல் பயணம்

    • ஜனவரி 23-ம் தேதி காலை 8.15 - டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார் ராகுல்
    • ஜனவரி 23-ம் தேதி காலை 11-மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்
    • ஜனவரி 23-ம் தேதி காலை 11 டூ மதியம் 1.30 மணி வரை -சிறுகுறு தொழில்முனைவோருடன் சந்திப்பு + மதிய உணவு
    • ஜனவரி 23-ம் தேதி மதியம் 1.45 டூ 2.15 சின்னியம்பாளையம் சந்திப்பு
    • ஜனவரி 23-ம் தேதி மதியம் 3.30 டூ 3.35 அவிநாசி -திருப்பூர்
    • ஜனவரி 23-ம் தேதி மாலை 4.10 டூ 4.40 அனுப்பர்பாளையம் -திருப்பூர்
    • ஜனவரி 23-ம் தேதி மாலை 5 டூ 5.45 திருப்பூர் குமரன் நினைவுத்தூன் அஞ்சலி
    • ஜனவரி 23-ம் தேதி மாலை 5.45 டூ 6.45 தொழிலாளர்களுடன் சந்திப்பு
    • ஜனவரி 23-ம் தேதி இரவு திருப்பூர் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸில் ஓய்வு
    2-ம் நாள் பயண விவரம்

    2-ம் நாள் பயண விவரம்

    • ஜனவரி 24-ம் தேதி காலை 10 மணி -திருப்பூர் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்படுதல்
    • ஜனவரி 24-ம் தேதி காலை 10.30 டூ 10.45 ஊத்துக்குளி -ஈரோடு
    • ஜனவரி 24-ம் தேதி காலை 11.15 டூ 11.45 பெருந்துறை -ஈரோடு
    • ஜனவரி 24-ம் தேதி நண்பகல் 12.30 டூ 12 ஈரோடு
    • ஜனவரி 24-ம் தேதி மதியம் 1.15 டூ 3.00 -ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி
    • ஜனவரி 24-ம் தேதி மாலை 3.45 டூ 4.15 காங்கேயம் -திருப்பூர் மாவட்டம்
    • ஜனவரி 24-ம் தேதி மாலை 4.45 டூ 5.45 - பொதுக்கூட்டம் -தாராபுரம்
    • ஜனவரி 24-ம் தேதி இரவு தாராபுரத்தில் தங்குகிறார் ராகுல்.
    3-ம் நாள் பயண விவரம்

    3-ம் நாள் பயண விவரம்

    • ஜனவரி 25-ம் தேதி காலை 10 மணி- தாராபுரத்திலிருந்து ராகுல் புறப்படுகிறார்
    • ஜனவரி 25-ம் தேதி காலை 10.30 மணி -சின்ன தாராபுரம் -கரூர் மாவட்டம்
    • ஜனவரி 25-ம் தேதி காலை 11.10 டூ 11.40 -கரூர் ரவுண்டானா
    • ஜனவரி 25-ம் தேதி நண்பகல் 12.00 டூ 12.45 - விவசாயிகளுடன் சந்திப்பு -வாங்கல்- கரூர் மாவட்டம்
    • ஜனவரி 25-ம் தேதி மதியம் 1.30 டூ 2.30 - மண்பானை சமையல் சாப்பாடு -கரூர் ஐந்து ரோடு பகுதி
    • ஜனவரி 25-ம் தேதி மாலை 3.00 டூ 3.30 -பள்ளபட்டி -கரூர்
    • ஜனவரி 25-ம் தேதி மாலை 4.15 டூ 4.30 -வேடசந்தூர் -திண்டுக்கல்
    • ஜனவரி 25-ம் தேதி மாலை 6 மணி -திண்டுக்கல்
    • ஜனவரி 25-ம் தேதி இரவு 8.45 - மதுரையிலிருந்து டெல்லி திரும்புகிறார் ராகுல்.
    முன்னேற்பாடுகள்

    முன்னேற்பாடுகள்

    ராகுலின் 3 நாள் தமிழக சுற்றுப்பயணத்தை ஒட்டி அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இப்போதே கோவையில் முகாமிட்டு ராகுலின் பயணத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

     
     
     
    English summary
    Rahul Gandhi tour programme of tamil nadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X