சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன?

கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் ரெயிடு நடந்த பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.கிருஷ்ணன் வீட்டில் இன்று திடீரென ரெயிடு நடந்து வருகிறது.. சட்டவிரோத சேர்க்கப்பட்ட பணம் அல்லது ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்று ஐடி குழுவினர் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அவருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களும் கிருஷ்ணன் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது... இந்த திடீர் ரெய்டு அரசியல் பின்னணியுடன் பார்க்கப்பட்டும் வருகிறது.

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் ஆர்.கிருஷ்ணன்.. இவரை பையா கவுண்டர் என்றும் சொல்வார்கள்.

பீகாரில் நிதீஷைவிட 9 மடங்கு தேஜஸ்விக்கு ஆதரவு அதிகம்! அதகளப்படும் பேஸ்புக்! பீகாரில் நிதீஷைவிட 9 மடங்கு தேஜஸ்விக்கு ஆதரவு அதிகம்! அதகளப்படும் பேஸ்புக்!

 பையா கவுண்டர்

பையா கவுண்டர்

கடந்த 2016-ல் தேர்தலில் அதிமுகவின் ஆறுக்குட்டியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.. இருந்தாலும் கோவை மாவட்டட திமுகவில் பையா கவுண்டர் என்றாலே ரொம்பவும் ஃபேமஸ்.. சில மாதங்களுக்கு முன்பு தான் கிருஷ்ணனுக்கு திமுக பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

திமுக

திமுக

இந்த திடீர் ரெய்டுக்கு என்ன காரணம் என்று நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.. அவர்கள் சொல்லும்போது, "கொங்கு மண்டலத்தை இந்த முறை வலுவாக்கும் முயற்சியில் திமுக இறங்கினபோதே அதிமுக தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது.. சமுதாய ஓட்டுக்களை குறி வைத்து, ஓட்டுக்களை பெற திமுக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருகிறது.. இதுதான் ஆளும்தரப்புக்கு எரிச்சலை தந்திருக்கும்.

 செல்வாக்கு

செல்வாக்கு

ஏற்கனவே அதிமுக கொங்கு வாக்கில் பெரும்பாலானவற்றை தன் கையில் வைத்துள்ளது.. செல்வாக்கானவர்களுக்கு இப்படி களங்கம் ஏற்படுத்தவே இப்படியெல்லாம் ரெய்டு நடத்தப்படுகிறது.. இன்னொரு காரணமும் இருக்கு, நேற்று உதயநிதி ஸ்டாலின் நடத்திய போராட்டம் சில அமைச்சர்களுக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சொந்த தொகுதியில் வந்து உதயநிதி யாருமே இதுவரை விமர்சிக்காத அளவுக்கு விமர்சித்துவிட்டார்.. அதிமுக இதனால் ஷாக் ஆகி உள்ளது..

போராட்டம்

போராட்டம்

இந்த போராட்டத்தில்தான் பையா கவுண்டர் கலந்து கொண்டிருந்தார்.. அதன் எதிரொலியாகவும் இந்த ரெய்டு நடந்திருக்கலாம். இப்படித்தான் கடந்த முறை தேர்தல் சமயத்தில் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை கதற வைத்துவிட்டது அதிமுக தரப்பு.. இப்போதும் அப்படி ஒரு யுக்தி இந்த ரெய்டுக்கு பின்னால் ஒளிந்திருக்கலாம்" என்றனர்.. எது எப்படியோ தேர்தல் நடந்து முடியும் வரை இப்படியேதான் வண்டி ஓடிட்டிருக்கும்.!

English summary
IT Raid in DMK executive house at Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X