• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சபரீசனையே "தொட்டுட்டாங்க".. ஒரே நாளில் திமுகவுக்கு எகிறிய மவுசு.. கொந்தளிப்பில் தொண்டர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ஒரே நாளில் திமுக வட்டாரமே கொந்தளித்து போய் உள்ளது.. திமுக முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெயிடுகளால், தொண்டர்கள் ஆவேசமடைந்தும் உள்ளனர்.

முக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக செயல்பட்டு வரும் அவருடைய மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் பழிவாங்கும் போக்கு என்று பொத்தாம்பொதுவாக இதை சொல்லிவிட்டாலும், தேர்தலுக்கு மூன்றே நாள் உள்ள நிலையில், இந்த ரெயிடு எதற்காக என்ற கேள்வியும் பின்னணியும் எழுகிறது.

 துரைமுருகன்

துரைமுருகன்

இதுகுறித்து ஒருசிலரிடம் பேசியபோது அவர்கள் சொன்னதாவது: "திமுகவின் அதிகாரமிக்க நபர்களை சீண்டினால்தான், அக்கட்சிக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்ற ரீதியில்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்படுகிறது.. கடந்த முறை அப்படி முக்கிய புள்ளிதான் துரைமுருகன்.. இந்த முறை அப்படி குறி வைக்கப்பட்டவர் எவ வேலு.. திமுகவின் நிதி மையம் என்று இவரை சொல்வார்கள்.

 பின்னடைவு

பின்னடைவு

இவரை சிக்க வைத்தால், திமுகவுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும் என்றுதான் முதலில் பிளான் இருந்துள்ளது.. அதனால், முதல் நாள் எதுவும் கிடைக்காத நிலையில், 2வது நாளாவது ஏதாவது கிடைக்கும் என்று ரெயிடு நடந்தது.. ஆனால், அப்படி பெரிய அளவுக்கு ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், வேலு வீட்டில் ரெயிடு நடந்தபோதே லிஸ்ட்டில் அந்த அதிகாரிகளின் லிஸ்ட்டில் சபரீசன் பெயர் இருந்ததாம்.. அவரது நண்பர்கள் பெயர்களும் இருந்ததாம்.

கோபம்

கோபம்

கலைஞர் இறந்தபிறகு, சபரீசன்தான் திமுகவில் முக்கிய விஷயங்களை தீர்மானிக்க கூடியஇடத்தில் இருக்கிறார்.. கடந்த எம்பி தேர்தலின்போதே கூட்டணி, தேர்தல் செலவு உட்பட பல விஷயங்கள் சபரீசன் இல்லாமல் நடக்காது.. இந்த முறை இந்த அளவுக்கு திமுக பலம் பொருந்தி இருப்பதற்கு காரணமே சபரீசனின் வியூகம் தான் என்று, அதிமுக உட்பட பாஜகவில் சிலரிடமிருந்தே வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றதாக தெரிகிறது..

ரெய்டு

ரெய்டு

சபரீசனை தொட்டால், அது ஸ்டாலினை அசைத்து பார்ப்பதற்கு சமம் என்பதாலேயே இந்த ரெய்டு நடக்கிறது போலும்.. "மோடியின் அரசியலை பார்த்து ஊரே சிரிக்குது.. இது மிக மிக கேவலமான அரசியல்வாதிகள் இன்னைக்கு நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எல்லாம் வயித்தெரிச்சல்தான்" என்று ஆர்எஸ் பாரதி சொன்னாலும், திமுக கொஞ்சம் ஷாக்கில்தான் உள்ளது' என்றனர்.

 திமுக

திமுக

இதனிடையே அண்ணாநகரில் திமுகவினர் கொந்தளித்து போய் உள்ளனர்.. இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "இதுக்கு முன்னாடி வருமான வரித்துறை இருந்தது.. ஆனால், இப்போது பாஜகவினர் போலவே அவர்கள் இருப்பது போல தெரிகிறது.. எங்களை யாருமே உள்ளே விடல.. ஒரு ஆளைக்கூட உள்ளே விடல.. அவங்க என்ன சேதனை போட்டாலும், எங்க கிட்ட இருந்தால் எடுத்துக்காம்.. ஆனால், எதையாவது பொய்யா வெச்சு, திணிச்சால்தான் உண்டு..

 பாதிப்பு

பாதிப்பு

இந்த சோதனை திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.. நாட்டுக்கே இது தெரியும்.. இது எங்களுக்கு சாதகம்தான்.. இதனால் ஓட்டு எங்களுக்குதான் கூடும் என்றார். இந்த தொகுதியில் அதிமுகவின் கோகுல இந்திரா நிக்கிறாங்க.. அந்த அம்மா இங்கு வெற்றி வாய்ப்பில் பின்தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதுக்குதான் இப்படி நடந்துக்கறாங்க.. நேத்துகூட இங்கே பணம் விநியோகம் நடந்தது.. நாங்கதான் பிடிச்சு தந்தோம்.. அதுக்கு ஆதாரம்கூட இருக்கு.. புகாரும் தந்திருக்கோம்" என்றனர்.

English summary
IT Raid in MK Stalins Sabareesan house, and the reasons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X