• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரூ.1,500 கூடுதல் வருவாய்.. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லை.. அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தற்போது சென்னை வந்துள்ளார். நேற்று சென்னை ஐஐடியில் அவர் 5ஜி அலைவரிசையைச் சோதனை செய்தார். தனது செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து அவர் பரிசோதித்தார்.

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய

இன்று பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

சலுகை

சலுகை

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "ரயில்வே இயக்கச் செலவுகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூ.100க்கும், ஒரு பயணியிடம் இருந்து ரூ.45 மட்டுமே ரயில்வே வசூலிக்கிறது. ரயில்வே துறையை ஒரு நிலையான போக்குவரத்து முறையாக வைத்திருக்கப் பொதுமக்களான நாம் பங்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

 திரும்ப வராது

திரும்ப வராது

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மீண்டும் வராது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2015 முதல் 2022 வரை தமிழகத்துக்கு உள்கட்டமைப்புப் பணிகளுக்காகச் சராசரியாக ரூ.2,500 கோடியும், இந்த ஆண்டு ரூ.3,861 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சபரிமலையில் இருந்து போடி - திண்டுக்கல் வரை ரயில் பாதையை நீட்டிப்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள்


இது பற்றி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், "ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாகச் சென்னை எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் 760 கோடி ரூபாயில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மேம்படுத்தப்படும். மாநிலத்தில் ரூ.30,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 யானைகள்

யானைகள்

கோவை - பாலக்காடு கோட்டத்தில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். யானைகள் கடந்து செல்லும் பாதையை நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம். மேலும் ரயில் பாதையின் உயரத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்" என்றார்.

 புல்லட் ரயில்கள்

புல்லட் ரயில்கள்

தமிழ்நாட்டில் புல்லட் ரயில்கள் அல்லது அதிவேக ரயில்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அதிவேக ரயில்கள் மூலம் முதலில் பெரிய நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், தெற்கு ரயில்வேவில், இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களைப் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள்

இந்தியாவில் கொரோனா கலத்தில் சில காலம் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. அதன் பின்னர், படிப்படியாக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால், இந்தியன் ரயில்வேக்கு ரூ 1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே சமீபத்தில் கூறியது. இந்தச் சூழலில் தான் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

English summary
Railway minister Ashwini Vaishnaw says, The concession for senior citizens cannot be resumed as the Railways is already operating at a subsidised rate: (மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்) Minister Ashwini Vaishnaw trip to Tamilnadu capital chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X