சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வேயில் துறைசார்ந்த (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அறிவித்துள்ளார்.

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும், ரயில்வே வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானதும், திமுக போராட்டத்தில் குதித்தது.

Railway ministry has come forward to conduct the exam in Tamil, MK Stalin welcomes

மீண்டும் தமிழகத்தில் ஒரு மொழிப்போர் வெடிக்கும், அதை திமுக முன்னெடுக்கும் என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, தபால் துறையில் துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தமிழிலிலும் தேர்வு நடத்த தயார் என தபால்துறை ஒப்புக்கொண்டது. அந்த வாக்குறுதியையடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஐ.நா. கூட்டத்தில், ஒரே நாளில் பேசப்போகும் மோடி, இம்ரான் கான்.. பெரும் எதிர்பார்ப்புஐ.நா. கூட்டத்தில், ஒரே நாளில் பேசப்போகும் மோடி, இம்ரான் கான்.. பெரும் எதிர்பார்ப்பு

தற்போது திமுக போராட்டத்தையடுத்து, ரயில்வே அமைச்சகம் தமிழில் தேர்வு நடத்த, முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

English summary
Following the DMK agitation, the railway ministry has come forward to conduct the exam in Tamil. Stalin's statement that the announcement was a great victory for the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X