சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் 2-வது கட்டமாக பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு ரயில்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மாநிலத்திற்குள்ளேயே என மொத்தம் 215 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள் 6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்

அதிகமான முன்பதிவு

அதிகமான முன்பதிவு

மக்கள் இ பாஸ் பெற்று பயணங்களை தொடர்ந்து வருகிறார்கள். எனினும் சிறப்பு ரயில்கள் இயக்கம் பல ஊர்களை இன்னமும் இணைக்கவில்லை. இந்த சூழலில் இருக்கும் ரயில்களில் பயணிக்க பல லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து காத்துக்கிடக்கின்றனர். இதனால் கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

100க்கும் மேற்பட்ட ரயில்கள்

100க்கும் மேற்பட்ட ரயில்கள்

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இப்படி இயக்கப்படும் ரயில்களில் பயணிக்க சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், பயணிகளை பரிசோதித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த சூழலில் 2-வது கட்டமாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வரலாம் என்கிறார்கள்.

சென்னையை இணைக்காமல்

சென்னையை இணைக்காமல்

இப்படி இயக்கப்பட உள்ள 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் தமிழகத்திற்கு 4 ரயில்கள் இயக்கப்படலாம் என்கிறார்கள். ஏற்கனவே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையை இணைக்காமல் மதுரை, கோவை, காட்பாடி, விழுப்புரம் என மற்ற நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. விமான சேவை மட்டுமே சென்னைக்கு இயக்கப்படுகிறது.

எங்கெங்கு ரயில்கள்

எங்கெங்கு ரயில்கள்

தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு பரிந்துரையின் கீழ் கீழ்க்கண்ட ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முன்மொழிந்து, ரயில்வே துறைக்கும் அனுப்பட்டுள்ளது. அரக்கோணம்-கோவை வழி சேலம், திருச்சி-செங்கல்பட்டு வழி அரியலுார், திருச்சி-செங்கல்பட்டு வழி தஞ்சை என இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறையும் போது கூடுதல் ரயில்களை இயக்க அரசு அனுமதிக்கும் என தெரிகிறது.வெளிமாநிலம் அல்லது வேறு மண்டல பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. இதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தள்ள அரசு உடனுக்குடன் இ-பாஸ் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
Railway plans 100 More trains across the country, 4 more trains may chance to be to be operate in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X