சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் சிட்டி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே தினமும் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இரு நகரங்கள் இடையே சொந்த வாகனங்கள், பஸ், விமானம், ரயில்கள் மூலம் தினசரி பல ஆயிரம் மக்கள் பயணித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக கொரோனா காரணமாக போக்குவரத்து குறைந்திருந்தது.

இந்த நிலையில் டபுள் டெக்கர் ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல் அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்

இரு ரயில்கள்

இரு ரயில்கள்

ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ரயில் எண் 06075/06076 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படும்.

காலை கிளம்பும்

காலை கிளம்பும்

இதன்படி, ரயில் எண் 06075 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் சிட்டி, ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு அதே நாள் மதியம் 1.10 மணிக்கு வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து 21.10.2020ம் தேதி முதல், ரயில் இயக்கம் தொடங்குகிறது.

இரவு வந்து சேரும்

இரவு வந்து சேரும்

மறு மார்க்கத்தில், ரயில் எண் 06076 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் பெங்களூரிலிருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை அதே நாள் இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலும் 21.10.2020 முதல் இயக்கப்படுகிறது. அதாவது இரு ரயில்களும் இன்று முதல் தினசரி பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளன.

ரயில் பயணிகள் கருத்து

ரயில் பயணிகள் கருத்து

ஏசி டபுள் டெக்கர் ரயிலில் இருக்கைகள் மிக அருகாமையில் இருக்கும். இது ஏற்கனவே பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது கொரோனா காலத்தில் ஏசி ரயில் அதுவும் டபுள் டெக்கர் போன்ற சீட் அருகாமையிலுள்ள ரயில் இயக்கப்படுவது மக்களிடம் வரவேற்பை பெறுமா, பாதுகாப்பானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
South Western Railway (SWR) has decided to run a AC double decker superfast special express daily between KSR Bangalore and MGR Chennai central.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X