சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 4 நாளைக்கு நல்ல மழை இருக்கு 2019ல் தமிழகத்தில் இயல்பைவிட 4 சதவீதம் குறைவு.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பைவிட 4 சதவீதம் குறைவு என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு பெய்த மழையின் அளவு மற்றும் புயலின் தாக்கம், வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு 454 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்திருக்கிறது என்றும் வழக்கமாக 447 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் பெய்யும் என்றும் கூறினார்.

நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான் நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்

பெரம்பலூரில் குறைவு

பெரம்பலூரில் குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அதிகபட்சமாக மழை என்பது நீலகிரி மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 65% அதிகமாக மழைப்பதிவாகி இருப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் மிககுறைந்த அளவு மழை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்திருக்கிறது என்றும் அங்கு இயல்பை விட 28% மிக குறைவாக மழைப்பதிவாகி உள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

22 மாவட்டங்களில்

22 மாவட்டங்களில்

தமிழக மழை நிலவரம் குறித்து பேசிய வானிலை மைய இயக்குனர், தமிழகத்தில் இயல்பையொட்டி 22 மாவட்டங்களில் மழைப் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப் பதிவாகியுள்ளதாகவும் 5 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான அளவில் மழை பெய்திருப்பதாகவும் கூறினார்.

3 வங்கக்கடலில்

3 வங்கக்கடலில்

2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைத் 8 புயல்கள் தாக்கியதாக கூறிய பாலச்சந்திரன், அதில் 3 வங்கக் கடலிலிருந்து உருவானவை என்றம், 5 அரபிக் கடலிலிருந்தும் உருவானவை என்றும் கூறினார். 1966ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் இரு முனை நிகழ்வு ஏற்பட்டதாவும் தெரிவித்தார்.

2019ல் எவ்வளவு மழை

2019ல் எவ்வளவு மழை

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 907 மிமீ மழைப் பதிவாகியுள்ளதாக கூறிய பாலசந்திரன், வழக்கமாக இந்த காலத்தில் 943 மிமீ மழை பொழிவு பதிவாகும் என்றும் அதன்படி பார்த்தார் 2019ம் ஆண்டு 4 சதவீதம் குறைவான மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

வானிலை மையம்

வானிலை மையம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை, புதுவையில் 9 செமீ, சீர்காழியில் 6 செமீ மழைப் பொழிவும் பதிவாகியுள்ளதாகவும், . தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் கூறினார்.சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
weather update in tamilnadu: rain details in tamil nadu year of 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X