சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரபிக்கடலில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்... 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - எச்சரிக்கும் வானிலை

அடுத்த 48 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்புசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பியுள்ளன.

Rain forecast for August 14,2020 Tamil Nadu weather office

இந்த நிலை அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடலில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, வேலூரில் தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

அடுத்த 3 நாட்கள் முக்கியம்.. நாடு முழுக்க.. தீவிர கனமழை பெய்ய போகிறது.. எங்கு எல்லாம் தெரியுமா? அடுத்த 3 நாட்கள் முக்கியம்.. நாடு முழுக்க.. தீவிர கனமழை பெய்ய போகிறது.. எங்கு எல்லாம் தெரியுமா?

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மேற்கு வங்கம் உள்ளிட்ட அதனை ஒட்டிய மேற்கு வங்கம் ஒடிசா, ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகஸ்ட் 14 முதல் 18ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    As per the latest weather bulletin, the Chennai Met department has issued, rainfall in eight districts of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X