சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதியில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளுகுளு வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை கடந்த 17ம் தேதி முதல் துவங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Rain lashes Chennai at night time

இந்த நிலையில்தான், சென்னையில், இன்று மாலை முதல், தி.நகர், ஓட்டேரி, கே.கே.நகர், நாவலூர், சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கோபாலபுரம், மந்தைவெளி, அசோக்நகர், அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

வட சென்னை பகுதிகளில் மழை தாக்கம் அதிகமாக இருந்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டுபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு

அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. எனவே இந்த வருடம் தீபாவளி மழையோடுதான் கொண்டாடப்படும் என்று தெரிகிறது.

English summary
It is raining today in various parts of Chennai. The people are happy because of the prevailing cold weather. Northeast monsoon rains have started on the 17th. As a result, it is raining in many parts of Tamil Nadu, including Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X