சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் செம மழை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Recommended Video

    தமிழகம்: 4 மாவட்டங்களில் ‘வெயிட்’டான மழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

    வங்க கடலில் உருவான புரேவி புயல் வலுவிழந்து விட்டதால் தற்போது அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த பகுதி அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதன் காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    Rain lashes Tamilnadu including Chennai from night

    இந்த நிலையில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை மழை பதிவாகி உள்ளது.

    Rain lashes Tamilnadu including Chennai from night

    இதேபோல, கடலூர், சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, பரமக்குடி, மயிலாடுதுறையில் மிதமான மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடம்பூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.

    அதேநேரம், மிகவும் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரிய அளவுக்கான மழைபொழிவு கிடையாது.

    Rain lashes Tamilnadu including Chennai from night

    இதனிடையே, இன்றும், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருந்து வருகிறது.

    யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை.. கன்னியாகுமரிக்கு மட்டும் எதிர்பார்த்த மழை கிடைக்கலை.. வெதர்மேன் யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை.. கன்னியாகுமரிக்கு மட்டும் எதிர்பார்த்த மழை கிடைக்கலை.. வெதர்மேன்

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்துமிதமான குளிர்ச்சியான சாரல் மழை பெய்து வருகிறது. மதுரை புறநகர் மற்றும் நகர் பகுதிகள் திருப்பரங்குன்றம், மதுரை விமானநிலையம், சாமநத்தம், பெருங் குடி, வில்லாபுரம், அவனியாபுரம், பகுதியில்நேற்று இரவு முதல் தற்போது வரை மிதமான குளிர்ச்சியான சாரல் மழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

    English summary
    Rain lashes Tamilnadu including Chennai since yesterday night, delta districts including kadalur and Chidambaram getting good rainfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X