சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

Recommended Video

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. இன்று முதல் 2 நாட்கள் லேசா… லேசா மழை..!

    தமிழகத்தின் மத்திய கடலோர பகுதி முதல் தென் தமிழகம் வரையிலும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

    நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை தொடரும்.

     ஏன் மழை

    ஏன் மழை

    இலங்கையின் தென் மேற்கு பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு வழிமண்டல சுழுற்சி காரணமாக இலங்கையின் வட கிழக்கு பகுதி மற்றும் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. பருவமழையின் ஒரு பகுதியாகவும் மழை தொடர்கிறது.

     மழைக்கான வாய்ப்பு

    மழைக்கான வாய்ப்பு

    அடுத்த 2 நாட்களுக்கு நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

     விடாமல் விரட்டும் மழை

    விடாமல் விரட்டும் மழை

    இது எப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு ஜனவரியில் தமிழகத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. இத்துடன் மழை ஓயாது எனவும், பிப்ரவரி மாதத்திலும் மழை தொடரும் னெ எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29, 30 களில் துவங்கும் இந்த மழை பிப்ரவரி மாதத்திலும் தொடரும். ஜனவரி 20,21 தேதிகளில் பெய்யும் மழை, 22 க்கு பிறகு ஓயும். அதன் பின் வறண்ட வானிலையே காணப்படும். மீண்டும் ஜனவரி 20, 30 தேதிகளில் மழை தொடரும்.

     செம மழை

    செம மழை

    வழக்கமாக ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் 18 மி.மீ., மட்டுமே மழை பெய்யும். ஆனால் 2021 ம் ஆண்டில் ஜனவரி 20 வரை 137.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதற்கு முன் 1921 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெய்த 141.2 மி.மீ தான் அதிகபட்ச மழையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 1923 - 136.0 மி.மீ., 1920 - 135.9 மி.மீ., 1909 - 116.5 மி.மீ., 1943 - 112.0 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

    English summary
    Rainfall expected again in Delta & South TN in next 2 days. Second highest rainfall for Tamil Nadu is under threat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X