சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடி.. சென்னையில் இடிமின்னலோட இப்படி ஒரு கனமழையா.. டுவிட்டரில் சென்னைவாசிகள் அதகளம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் திடீரென பெய்ய தொடங்கிய மழை சாலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை பார்த்து டுவிட்டரில் சென்னைவாசிகள் பலர் எங்க ஏரியாவுல மழை, என வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அதகளப்டுத்தி வருகிறார்கள்.

சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் இந்த சூழலில் திடீரென கொட்டி வரும் மழைய பாதுகாக்க வேண்டும் என்று டுவிட்டரில் பலர் கோரிக்கை விடுத்து பதிவுகளை போட்டு வருவதை காண முடிகிறது.

Raining many places in chennai with moderate rains and lightning

இன்று மாலை மங்கும் நேரத்திலேயே மேகக்கூட்டங்கள் சென்னையிலேயே வட்டம் போட்டுக்கொண்டிருந்தது. திடீரென இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது. இந்த மழை சென்னை தேனாம்பேட்டை, கிண்டி, ஒஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், ராயபுரம், மிண்ட், பாரிஸ்கார்னர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக்நகர், மாம்பலம், திநகர், நந்தனம், ராயப்பேட்டை, சூளைமேடு உள்பட பல இடங்களில் அடித்து ஊற்றி வருகிறது.

கொரட்டூர், மயிலாப்பூர், தாம்பரம் என பகுதிகளிலும் பலமாக மழை கொட்டியது. இன்னும் பல இடங்களில் மழை தற்போது வரை கொட்டிவருகிறது.

இதை கண்டு மகிழ்ந்துள்ள சென்னைவாசிகள் வழக்கம் போல் #chennairains என்ற ஹேஸ்டேக்கில் டுவிட்டரில் எங்க ஊரில் மழை, எங்கஏரியாவில் மழை என அதகளம் செய்து

வருகிறார்கள். இடிமின்னலுடன் பெய்து வரும் மழை பலர் வீடியோ எடுத்து, அம்மாடி என்ன மழை என கருத்து தெரிவித்துள்ளனர்.

மழை விழுகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டுவிட்டரை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் சென்னை வாசிகள்.

அவர்களின் டுவிட் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு..

English summary
Raining many places in chennai with moderate rains and lightning, mylapore, T Nagar, korattur, saidapet, OMR road and many places get heavy rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X