சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இடைவெளிவிட்டு மழை தொடரவே வாய்ப்பு இருப்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையின் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேகங்கள் நன்றாக இணைந்துள்ளதால், கொஞ்சம் இடைவெளிக்கு பின்னர் சென்னையில் மழை தொடரும்.

Rains with breaks will continue in Chennai : Tamil Nadu Weatherman

சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் வரத்துக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை அற்புதமான துவக்கமாக உள்ளது. அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறது கிழக்கு கடல் அலை என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை விவரம்:

மில்லி மீட்டர்

  • பூந்தமல்லி 61 மில்லி மீட்டர்,
  • காஞ்சிபுரம் 53
  • செம்பரம்பாக்கம் ஏரி - 51
  • கொரட்டூர் - 47
  • மீனம்பாக்கம் - 46
  • கிண்டி - 45
  • ஆலந்தூர் - 43
  • கொலப்பாக்கம் - 38
  • கே.கே.நகர் - 38
  • திருவள்ளூர் - 36
  • இந்துஸ்தான் பல்கலைக்கழகம் - 36
  • தாமரைப்பாக்கம் - 29
  • நுங்கம்பாக்கம் - 28
  • அம்பத்தூர் - 28
  • திருத்தணி - 28
  • சோளவரம் - 27
  • கும்மிடிப்பூண்டி - 26
  • காட்டுப்பாக்கம் - 25
  • சோழிங்கநல்லூர் - 24
  • மாதவரம் - 21
  • பொன்னேரி - 20
  • வெம்பாக்கம் - 20
  • ரெட்ஹில்ஸ் - 17
  • காட்டுப்பாக்கம் - 16
  • ஊத்துக்கோட்டை - 15
  • மெரினா - 15
  • எண்ணூர் - 13
  • திருவாலங்காடு - 10
  • பூண்டி - 10
  • பாரிஸ் - 10
English summary
Tamil Nadu Weatherman on chennai rains: Rains with breaks will continue in Chennai, more bands of clouds converging well in South east of Chennai in Sea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X