• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னைப் போய் டிரைவர்னு சொல்லிட்டாங்களே தீபா.. இதயம் வலிக்குது... கண்ணீர் விடும் ராஜா!

|
  ஜெ.தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா

  சென்னை: என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழ விடுங்க. எனக்கு அரசியலே வேணாம். நான் புள்ளக்குட்டி பெத்துட்டு நிம்மதியா குடும்பம் நடத்தணும். மீறி, தொண்டர்கள் அதுயிதுன்னு சொல்லிட்டு வீட்டுப் பக்கம் வந்தீங்கன்னா போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவேன்!'

  - ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த சில நாட்களுக்கு முன் கொடுத்த அதிரடி இது. அரசியலை விட்டே வெளியேறுகிறேன் என்று அழுதபடி சென்றவர், ஒரு ஆடியோவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விட்டு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.

  அந்த ஆடியோவில் "எனது அலுவலக பணியை கவனித்துக் கொண்டிருந்த ராஜாவால் நான் நடத்தி வந்த பேரவைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜா மற்றும் அவரது நண்பர்களால் எனக்கும், என் கணவர் மாதவனின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது." என்று அலறியிருக்கிறார்.

  ஆமாப்பா ஆமா

  ஆமாப்பா ஆமா

  இதைத்தொடர்ந்து பீதியான மீடியா மக்கள் தீபாவுக்கு போன் பண்ணி கேட்டபோது "ஆமா, நான் நடத்திய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் அலுவலக பணியை ராஜாவும், அவரது கூட்டாளிகளும் கவனித்தனர். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அதனால் ராஜா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார். என் பேரவையில் பதவி வாங்கித் தருவதாக சொல்லி பலரிடம் பணம் வாங்கி சம்பாதித்திருக்கிறார்.

  கூட்டு சதி

  கூட்டு சதி

  இந்த விஷயமே ரெண்டு வருஷம் கழிச்சுதான் எனக்கு தெரிஞ்சுது. ஆனால் அதற்குள் என்னமோ நான் தான் பேரவையை வைத்து பணம் சம்பாதித்ததாக கிளப்பி விட்டனர். மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் பெரிய பெயரையும், செல்வாக்கையும் சிதைப்பதே இவர்களின் நோக்கம். ராஜாவும், அவரது டீமும் பண்ணிய மோசடி பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்குது. விரைவில் போலீஸ் கமிஷனரை சந்திச்சு புகார் கொடுப்பேன்." என போட்டுத் தாளித்துவிட்டார்.

  இதயம் வலிக்குது

  இதயம் வலிக்குது

  இந்நிலையில், தீபாவின் புகாரைப் பற்றி பதில் தந்திருக்கும் ராஜாவோ "ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க சார். தீபாவை சின்னப் பொண்ணு பருவத்துல இருந்து தெரியும். நாங்க ஃப்ரெண்ட்ஸ். ஆனா என்னைய அவர் ‘டிரைவர்'ன்னு சொல்றப்ப மனசு காயப்படுது, இதயம் வலிக்குது. என்னை ரொம்பக் காயப்படுத்துறார் இப்படி சொல்லி." என்று கண்கலங்கிவிட்டு, " அவர் சொல்லும் எந்தப் புகார்களுக்கும் ஆதாரமில்லை. ச்சும்மா அடிச்சுவிடுறார் பொய் குற்றச்சாட்டுக்களை." என்றிருக்கிறார்.

  இது என்ன சண்டையோ

  இது என்ன சண்டையோ

  இந்த நிலையில் தீபாவின் வீட்டுக்கு நெருக்கமானவர்களோ "ஒண்ணுமில்லைங்க. கொஞ்ச நாளா விலகி இருந்த ராஜா இப்போ மறுபடியும் தீபா வீட்டுக்குள்ளே வர முயற்சிக்கிறார். இது மாதவனுக்குப் பிடிக்கலை. அவரைத் தடுக்கவே இப்படி தீபாவை வற்புறுத்திப் புகார் கொடுக்க வைக்கிறார் மாதவன்.

  அப்புறமும் ஏன் சண்டை

  அப்புறமும் ஏன் சண்டை

  மூணு பேரும் நேர்ல மீட் பண்றப்ப நல்லாதான் பேசிக்கிறாங்க. ஆனால் அப்புறமா இப்படி சண்டை போடுறாங்க. என்னதான் நடக்குது இந்த முக்கோணத்துல." என்று தலையை சொறிகின்றனர். கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு!

  - ஜி.தாமிரா

   
   
   
  English summary
  Driver Raja has said that he feels bad about Deepa ditched him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X