சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 அமைச்சர்களும் சேர்ந்து காய் நகர்த்தி.. ராஜ கண்ணப்பனையே ஓரம் கட்டிட்டாங்களே!

எம்பி தேர்தலில் சீட் வழங்காததால் ராஜ கண்ணப்பன் அதிர்ச்சியில் உள்ளாராம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக தொகுதி பட்டியல்... திமுகவுடன் எங்கு நேருக்கு நேர் மோதல் ? முழு தகவல்

    சென்னை: 2 அமைச்சர்களும் சேர்ந்து.. சரியாக காய் நகர்த்தி.. கட்டம் கட்டி.. கடைசியில் ராஜ.கண்ணப்பனை ஓரங்கட்டியே விட்டார்களாம்!

    எம்ஜிஆரின் தனிப்பட்ட மரியாதை இருந்த காரணத்தினால் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர் கண்ணப்பன்.. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெலயலிதாவிடம் நம்பிக்கையை பெற்று அவரது அமைச்சரவையிலும் முக்கிய இடத்தை வகித்தார்.

    அதனால் அதிமுகவின் செல்லபிள்ளையாக அன்று இருந்தவர். மின்சாரம், நெடுஞ்சாலை, பொதுப்பணி என்ற முப்பெரும் துறைகளின் அமைச்சர் பொறுப்பை ஏற்றவர்.

    கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ.. அங்கு நிற்பேன்.. சூசகமாக சொல்லும் தமிழிசை! கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ.. அங்கு நிற்பேன்.. சூசகமாக சொல்லும் தமிழிசை!

    அழகுமுத்துக்கோன்

    அழகுமுத்துக்கோன்

    இவர் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர். அமைச்சராக இருந்தபோது, நெல்லை மாவட்டடத்தில் அழகுமுத்துகோன் மணிமண்டபம், சிலையையும், சென்னை எக்மோர் முழு உருவ வெண்கலச்சிலையை வைக்க நடவடிக்கை எடுத்தவர். அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையும் அரசு விடுமுறை நாளாக வலியுறுத்தியதும் இவர்தான். இது இப்போது நடைமுறையிலும் உள்ளது.

    3 தொகுதிகள்

    3 தொகுதிகள்

    இந்நிலையில், கொஞ்சமும் யாதவர்களின் செல்வாக்கை இழக்காத இவர், திரும்பவும் எம்பி தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டார். 3 தொகுதிகள், அதாவது ராமநாதபும், சிவகங்கை, மதுரை இதில் ஏதாவது ஒன்று கிடைக்கும் என்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். இங்கெல்லாம் யாதவர்கள் அதிகம் உள்ள பகுதி.

    புகைச்சல்

    புகைச்சல்

    ஆனால் தொகுதி பங்கீட்டில் ராமநாதபுரமும், சிவங்கையும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கு காரணம், ராமநாதபுர உள்ளூர் அமைச்சரின் புகைச்சல்தான். அதனால் சீட் தரவில்லை. சிவங்கை தருவார்கள் என்று பார்த்தால், அங்கேயும் சீட் தர மறுத்துவிட்டார்கள். இருந்த ஒரே வாய்ப்பு மதுரைதான்.

    ஓரங்கட்டினார்கள்

    ஓரங்கட்டினார்கள்

    ஆனால் சீட் கொடுத்தால், எங்கே கண்ணப்பன் வளர்ந்து தங்களையும் மிஞ்சி வேற லெவலுக்கு வளர்ந்துவிடுவாரோ என்று நினைத்தார்களாம் இரண்டு தமிழக அமைச்சர்கள். அவர்கள்தான் செல்லூர் ராஜு, உதயகுமார். கண்ணப்பனுக்கு சீட் தரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்களாம். கடைசியில் மதுரையில் வி.வி.ஆர். ராஜ்சத்தியனுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள். இதனால் அதிமுக ஒட்டுமொத்த யாதவர்களின் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    MP seat was not given to Raja Kannappan in Madurai constituency. It is said that two ministers are responsible for this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X