சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவில் சீட் இல்லை.. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளித்த ராஜகண்ணப்பன்!

    சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மதசார்ப்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    எம்ஜிஆர் காலத்திலிருந்தே ராஜகண்ணப்பன் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர். அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தார்.

    இந்தநிலையில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் ராஜகண்ணப்பன். சுமார் 8 வருடங்கள் அக்கட்சியை நடத்திய நிலையில் அவரால் தொடர்ந்து நடத்தமுடியவில்லை.

    தலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என பேஸ்புக்கில் அறிவிப்பு.. குமரவேலின் விலகலை ஏற்ற மநீம!தலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என பேஸ்புக்கில் அறிவிப்பு.. குமரவேலின் விலகலை ஏற்ற மநீம!

    3000 வாக்குகள் வித்தியாசம்

    3000 வாக்குகள் வித்தியாசம்

    இதையடுத்து அக்கட்சியை அதிமுகவுடன் இணைத்து கொண்டார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு சிவகங்கை எம்பி தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார்.

    விருப்பமனு

    விருப்பமனு

    இதனால் இந்த தேர்தலில் சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் கட்டாயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் கட்சித் தலைமையை அணுகினார். பின்னர் இரு தொகுதிகளுக்கும் விருப்பமனுவை தாக்கல் செய்தார்.

    விலக முடிவு

    விலக முடிவு

    இந்த நிலையில் அந்த இரு தொகுதிகளும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்துவிட்டார்.

    ஆதரவு அளிப்பதாக உறுதி

    ஆதரவு அளிப்பதாக உறுதி

    மேலும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் ராஜகண்ணப்பன். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

    English summary
    EX Minister RajaKannappan is going to support DMK as he has not got ticket from ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X